அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படித்த பிறகு நமது முன்னோர்கள் பற்றியும், அவர்களின் பெருமைகள் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகுந்தது. அதன் தொடர்ச்சியாக ச.ந.கண்ணன் அவர்கள் எழுதிய " ராஜ ராஜ சோழன் " புத்தகத்தை படித்தபொழுது ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே பொருளாதார , சமூக, பொறியியல் துறையில் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினார்கள் என்பதை அறிந்து வியந்தேன்.
அறுபது ஆயிரம் யானைகள் கொண்ட படையும், ஒன்பது லட்சம் முழுநேர போர்வீரர்களையும் கொண்ட காலாட் படையும், மிக வலிமையான கப்பல் படையும் அந்த காலகட்டத்தில் சோழர்களின் மற்ற துறைகளின் வியத்தகு வெற்றிகளை உறுதி செய்தன. இந்த புத்தகம் வெறும் கதை சொல்லுவதாக இல்லாமல் அவர்களின் பரம்பரை, நிதி நிர்வாகம், வேளாண்மை, வரிவிதிப்பு முறைகள், இறை வழிபாடு, சமூக நிலை, அவர்கள் பயன் படுத்திய அளவீடுகளின் இன்றைய அளவு, அரசு நிர்வாக அமைப்புமுறை, கடல் கடந்த அவர்களின் வணிகம் போன்றவற்றை தகுந்த ஆதாரங்களோடு எழுதியுள்ளார்.
அவற்றில் பெரும்பாலான தகவல்கள் நமது பழமையான கோவில் கல்வெட்டுகள் மூலம் கிடைகப்பெற்றவை. ( துரதிஷ்டவசமாக நம்முடைய அரசாங்கங்கள் அதை வெளிக்கொணர்வதில் போதிய முயற்சி எடுக்கவில்லை, இப்பொழுது சிதைந்து போன கோவில் தூண்களிலும், சிற்பங்களிலும் நமது வரலாற்றை மீட்டு எடுக்கும் முயற்சியில் நமது முகநூல் நண்பர்கள் ஈடுபட்டுள்ளார்கள்,உதாரணம் செஞ்சி அருகே தேவனூர் கோவில் சீரமைப்பில் தங்களை அர்பணித்துள்ள சசி மற்றும் நண்பர்கள் ) .. சில இடங்களை ஆசிரியர் ஒரே தகவல்களை திரும்பவும் எழுதி உள்ளது தவிர மற்றபடி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது சமூகம் எவ்வளது உயர்ந்த நிலையில் இருந்ததை அறிய நமக்கு பெரிதும் உதவும்.
அசோகர் மரம் நாட்டையும், பதவிக்காக உடன் பிறந்த சகோதரர்களையே கொன்ற முகலாயர்களையும் போற்றிப் புகழும் நமது வரலாற்று நூல்கள் அன்றைய காலகட்டத்தில் உலகின் மிக வலிமையான கடல் படையும் அதன் மூலம் தென் கிழக்கு ஆசியாவில் நம்மவர்கள் கால் பதித்து புலிக்கொடி நட்டதை ஏனோ பறைசாற்றவில்லை.மதிப்புரை தொடரும் ..................
நன்றி