1892 ஆம் வருடம் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஒரு அனாதை மாணவன் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்.தன் நண்பன் ஒருவனுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கல்லூரிக்கு பணம் கட்டலாம் என முடிவெடுத்தான்.
J. Paderewski என்னும் பியானோ கலைஞரை வைத்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று அவர் மேனேஜரை சந்தித்தனர்.அவர் 2000 டாலர்கள் கொடுத்தால் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்றார்.இவர்கள் இருவரும் ஒத்துக் கொண்டனர்.
இசை நிகழ்ச்சி நடத்தும் நாள் வந்து விட்டது,ஆனால் இவர்களால் 1600 டாலர்களுக்கு மட்டுமே டிக்கெட் விற்க முடிந்தது. Paderewski யிடம் வசூல் பண்ண 1600 டாலர் பணத்தை கொடுத்து விட்டு மீதி 400 டாலருக்கு செக் கொடுத்தனர்.அடுத்த வாரம் இந்த செக் மூலம் பணம் எடுத்து கொள்ளுங்கள் அதற்குள் நாங்கள் வங்கியில் பணத்தை செலுத்தி விடுகிறோம் என்றனர்.
Paderewski இதை நான் ஒத்து கொள்ள முடியாது என்று கூறி செக்கை கிழித்து எறிந்தார்.1600 டாலர் பணத்தையும் அவர்களிடமே திருப்பி குடுத்து விட்டு உங்கள் கல்லூரி கட்டணத்தை இதை வைத்து கட்டுங்கள் என்றார்.இலவசமாகவே அவர்களுக்காக அந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்தார்.
அறிமுகமே இல்லாத இரண்டு கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக பண உதவி செய்த அற்புதமான மனிதர் Paderewski சில வருடங்களில் போலாந்து நாட்டு பிரதம மந்திரி ஆனார்.
அற்புதமாக அவர் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் போது உலக போர் ஆரம்பமானது.உலக போரில் போலாந்து நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது.1.5 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர், போலாந்து நாடும் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து கொண்டு இருந்தது. Paderewski அமெரிக்காவின் உணவு மற்றும் துயர் தடுப்பு குழுவிடம் உதவி கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.
Herbert Hoover என்பவர் தான் உணவு மற்றும் துயர் தடுப்பு குழுவின் தலைமை அதிகாரியாக இருந்தார்,பின்னாளில் அவர் அமெரிக்காவின் பிரெஸிடெண்டாக இருந்தார். Paderewski உதவி கேட்டுள்ளார் என்று தெரிந்தவுடன் டண் கணக்கில் உணவு தாணியங்களை கப்பலில் ஏற்றி போலாந்து நாட்டுக்கு அனுப்பினார்.
போலந்து சகஜ நிலைமைக்கு திரும்பியதும் Paderewski , Herbert Hoover க்கு நன்றி சொல்ல அமெரிக்கவுக்கு புறப்பட்டார்.
Paderewski நன்றி சொல்ல வாயெடுத்த போது நில்லுங்கள் பிரதம மந்திரி அவர்களே நீங்கள் நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.நீங்கள் செய்த உதவியை விட நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.
கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்த இரண்டு இளைஞர்களுக்கு உதவி செய்தீர்களே அதில் ஒருவன் தான் நான்.அன்று நீங்கள் செய்த உதவியால் தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.
அறிமுகம் இல்லாத ஒருவருக்கு செய்த உதவியால் ஒரு நாட்டுக்கே உணவு கிடைத்தது.
இந்த உலகம் ஒரு அற்புதமான படைப்பு.எதை நாம் மற்றவர்களுக்கு செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும்.