எட்டுத்தொகை நூல்களுள் அறம், போர், வீரம்போன்ற புற வாழ்க்கை பற்றிகூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில்நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டதுகிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியைமறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறைகூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய்நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லைஎன்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாதுஎன்பதை மிக அழகாக இந்தபாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல்உண்மையும் இந்த சங்கப் பாடல்கள்மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல்1: அதனினும் உயர்ந்தது
பாடியவர்: கழைதின் யானையார்
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன்என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப்பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார்ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடுபட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர்மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும்பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச்சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன்வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாதுசுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சைஎடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட இழிவான செயல் பிச்சை இடாமல்இருப்பது ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட கொடுப்பதை வேண்டாம்என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப்பெரியதாக இருந்தாலும் தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால் பசுக்களும், மற்றவிலங்குகளும் சென்று நீர் அருந்திசேறு நிறைந்த சிறு குளம்ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்குஅந்த குளத்து நீரையே அருந்துவர்.அது போல் மிகப்பெரியவர் பலர் இருந்தாலும் அவர்கள்கடல் நீரை போன்றவர்கள், எங்களின்துயர் துடைக்க மாட்டார்கள், நீவறுமை அடைந்து வசதி குறைந்துஇருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும்வானத்து மேகம் போல் அள்ளிஅள்ளி எங்களுக்கு வழங்குவாய், ஆனால் இன்று நீவழங்காது இருப்பது எங்கள் குறையே, நாங்கள்புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள்சரியில்லை,எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்குகொடுக்கும் வள்ளல் ஓரியே, நீநீடோடி வாழ்க