ஒவ்வொருநாளின் முதல் அரைமணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை நாம் எவ்வாறு அமைத்துக்கொள்கின்றோமோ, அந்தநாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒரு நாள் வெற்றிகரமானதாகவோ அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாகவோ இருப்பது என்பது நம் அணுகுமுறையைப் பொறுத்தது.
வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் அடுத்த 90 நாட்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அதனை சிறிய சிறிய பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொருநாளின் துவக்கத்தில் அன்றைய இலக்கினையும், அந்த நாளின் முடிவில் அன்றைய நாளின் செயல்பாடுகளையும் தொடர்ந்து ஆராய்ந்து எங்கே தவறு செய்கின்றோம் என்று அறிந்து, அதனை சரி செய்தால் வெற்றிக்கான இலக்கின் பாதையில் விரைவாக பயணம் செய்யலாம்.
சிறிய சிறிய இலக்குகளில் நாம் வெற்றி பெறுவது நம் தனன்பிக்கையை அதிகரிக்கச்செய்யும். 90 நாட்களில் நமது எண்ணங்கள் செயல்களாக மாறி, செயல்கள் வெற்றிகரமானதாக அமைவதோடு அடுத்த இலக்கினையும் நிர்ணயித்திருப்போம்.. வெற்றி என்பது தொடர்கதையாக அமையும். அதை ரசிக்கத் தயாராவோம் நண்பர்களே....!
0 comments