கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், துங்கபத்ரா, கிருஷ்ணா நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியேறும் ஏராளமான மழை நீர், யாருக்கும் பயனின்றி கடலில் கலந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் துங்கபத்ரா நதி, கர்நாடகா மாநிலம் வழியாகப் பாய்ந்து, ஆந் திர எல்லையில் கிருஷ்ணா நதியுடன் இணைகிறது. ஆந்திராவில் உள்ள மேலும் பல சிற்றாறுகள், ஓடைகளும் கிருஷ்ணா நதியுடன் இணைகின்றன.மகாராஷ்டிரா, கர்நாடாகாவில் கடும் மழை பெய்தால் துங்கபத்ராவில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. துங்கபத்ரா கிருஷ்ணா நதியுடன் இணைவதால், கிருஷ்ணா நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடுமையான சேதம் ஏற்படுகிறது. ஏராளமான மழை நீர் கடலில் கலக்கிறது.கடந்த சில நாட்களாக, கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, துங்கபத்ரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவிலும், குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்னூல் மாவட்டத்தில் பாயும் கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் டுள்ளது.துங்கபத்ரா, கிருஷ்ணா ஆகிய நதிகளில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வினாடிக்கு 22 லட்சம் கனஅடி நீர் கடலில் கலந்து வருகிறது. தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட் டூர் அணையில் இருந்து, வெள்ளப் பெருக்கு நேரத்தில் அதிகபட்சமாக ஆறு லட்சம் கனஅடி நீர் தான் வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அபாய அளவைக் காட் டிலும் அதிகமான அளவில் நீர் வரத்து இருப்பதால், ஸ்ரீசைலம் அணையில் இருந்து, தொடர்ந்து நீர் திறந்துவிடப்படுகிறது.கர்னூல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. கர்னூல் மாவட்டத் திற்கு அருகில் உள்ள மகபூப் மாவட்டத்திற்கும் வெள்ள அபாயம் ஏற்பட் டுள்ளது.
மேலும், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கர்நாடகாவில் பெய்யும் கன மழையால் , ஜூராலா திட்டம் மற்றும் வேறு பல திட்டங்கள் மூலம் வினாடிக்கு 25 லட்சம் கனஅடி நீர் ஸ்ரீசைலம் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து, 12 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.ஸ்ரீசைலம் அணையில் இருந்து 22 லட்சம் கனஅடி உபரிநீர், நாகர்ஜுனா சாகர் அணைக்கு திறந்துவிடப் பட்டுள்ளது. நாகர்ஜுனா சாகர் அணையின் 26 கண் மதகுகள் திறக்கப்பட்டு, அதிகமான உபரிநீர், விஜயவாடா, கிருஷ்ணா மாவட் டத்தில் உள்ள பிரகாசம் அணைக்கு திறந்து விடப் பட்டுள்ளது.
பிரகாசம் அணையில் இருந்து 72 கண் மதகுகள் வழியாக வங்காள விரிகுடாவிற்கு உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.வங்கக் கடலில் கலந்து வீணாகும் மழை நீரை பயன் படுத்த நதிநீர் இணைப்புத் திட்டம் முக்கியம். ஆனால், நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட் டுள்ளன. இந்நிலையில், மாற்று திட்டங்கள் மூலம், வீணாக கடலில் கலக்கும் மழை நீரை தமிழகம் மற் றும் ஆந்திர மாநிலங்கள் பயன்படுத்த முடியும்.கால்வாய்கள் அமைப்பதன் மூலம், கடலில் வீணாகும் மழை நீரை இரு மாநிலங்களும் பயன்படுத்தலாம். கிருஷ்ணா நதியின் முகத்துவாரத்தில் தான் பிரகாசம் அணை அமைந்துள் ளது.இந்த அணையில் இருந்து கால்வாய் மூலம் நீர் எடுத்து வந்தால், ஆந்திராவில் நெல்லூர் உள் ளிட்ட பல மாவட்டங்கள் மிகுந்த பயன் அடையும். மேலும், கால்வாயில் கிடைக்கும் உபரி நீரை கொண்டு வருவதன் மூலம் தமிழகமும் பயன் பெற வாய்ப்புள்ளது.
தெலுங்கு கங்கை திட்டம் போல, தமிழக, ஆந்திர மாநிலங்கள் இணைந்து ஒரு கால்வாய் திட்டத்தை செயல்படுத்தலாம். இன் றைக்கு, கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் தான் ஆந்திராவில் ஆட்சி செய்து வருகிறது.தமிழக முதல்வர் மனது வைத்தால், பிரகாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கால்வாய் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முடியும்.
ஆந்திர, தமிழக அரசுகள் இணைந்து செயல்படுத்தியுள்ள தெலுங்கு கங்கை திட்டத்திற்கு, கிருஷ்ணா நதியில் அமைந்துள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து, கால்வாய் மூலம் நீர் பெறப்படுகிறது. இவ்வாறு கொண்டு வரப்படும் நீரை, கடப்பா அருகில் உள்ள சோமசீலா அணையிலும், கண்டலேறு அணையிலும் தேக்கி வைக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் கால்வாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. சோமசீலா அணை 78 டி.எம்.சி.,யும், கண்டலேறு அணை, 59 டி.எம்.சி., அளவு நீர்த்தேக்கம் கொண்டவை. ஸ்ரீசைலம் அணையில் இருந்து தெலுங்கு கங்கை கால்வாய் வழியாக நீர் திறந்துவிட்டால், இந்த இரண்டு அணைகளும் நிரம்பும். ஆனால், தெலுங்கு கங்கை திட்ட கால் வாயை சோமசீலா அணையுடன் இணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆந்திர அரசு விரைந்து முடித்தால், கிருஷ்ணா நதியில் வீணாகும் நீரை அதிகமாக சேமிக்க முடியும்.
- courtesy தினமலர்
Thanks
Thamilselvan Subramaniam
Thamilselvan Subramaniam
0 comments