தபுசங்கர் கவிதைகள் - II

10/04/2009 11:02:00 PM


தேவதைகளின் தேவதை.........


"நான் வழிபட இந்த உலகத்தில் எத்தனையோ
கடவுள்கள் இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற இந்த உலகத்தில் எத்தனையோ
மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,

நான் காதலிக்க இந்த உலகதில் நீமட்டும்தான்
இருக்கிறாய்!."


"நீ எப்போதும் தலையைக்குனிந்தே வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க முடிகிறது!

ஒரேயொரு முறை உன் தலையை நிமிர்த்தி வெட்கப்படேன்.
வெகு நாட்களாய் உன் வெட்கத்தை தரிச்க்க துடிக்கிறது
வானம்."

சீப்பெடுத்து

உன் கூந்தலைச் சீவி

அலங்கரித்துக்கொண்டாய்.

அந்தச் சீப்போ

உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து

தன்னை அலங்கரித்துக்கொண்டது.

************************


எதற்காக

நீ கஷ்டப்பட்டுக் கோலம்

போடுகிறாய்…?

பேசாமல்

வாசலிலேயே

சிறிது நேரம் உட்கார்ந்திரு.

போதும்!

*******************
உனக்கு திருஷ்டி சுற்றி

வாசலில் உடைந்த பூசணிக்காய்

நன்றி சொன்னது…

உன் அழகு முகத்தை

மூன்று முறை

சுற்றிக் காட்டியதற்காக.

********************

உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம்

‘தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்’ என்று

ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே

*****************************

‘என்னை எங்கு பார்த்தாலும்

ஏன் உடனே நின்று

விடுகிறாய்?’ என்றா

கேட்கிறாய்.

நீ கூடத்தான்

கண்ணாடியை எங்கு

பார்த்தாலும்

ஒரு நொடி நின்று விடுகிறாய்.

உன்னைப் பார்க்க உனக்கே

அவ்வளவு ஆசை இருந்தால்

எனக்கு எவ்வளாவு இருக்கும்

**********************

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக.

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்?
****************************

கண்ணாடித் தொட்டியில்

நான் வளர்க்கும் மீன்கள்,

உன் மீது புகார் வாசிக்கின்றன…

‘அந்த ரெண்டு மீன்களுக்கு மட்டும்

ஏன் அவ்வளவு அழகான தொட்டி?’ என்று.

*******************************

உன் பிறந்தநாளைப் பார்த்து

மற்ற நாட்கள்

புலம்பிக் கொண்டு இருக்கின்றன…

பிறந்திருந்தால்

உன் பிறந்த நாளாய்

பிறந்திருக்க வேண்டும் என்று.

*************************

நீ எந்த உடை அணிந்தாலும்

உன்னால்

உன்னைத்தான் மறைக்க முடியுமே ஒழிய

உன் அழகை மறைக்க முடியாது.

*****************************

நீ ஆற்றில் குளிப்பதை

நிறுத்திவிட்டு

வீட்டுக்குள் குளியலறை கட்டிக்

குளிக்க ஆரம்பித்தாய்.

வறண்டு போனது

ஆறு.

*********************

யாராவது

ஏதாவது

அதிர்சியான

செய்தி சொன்னால்

‘அச்சச்சோ’ என்று

நீ நெஞ்சில் கைவைத்துக்

கொள்வாய்.

நான் அதிர்ச்சி

அடைந்துவிடுவேன்!

********************

திருவிழா அன்று

கோவிலில் எல்லோருக்கும்

கஞ்சி ஊற்றிக்

கொண்டிருந்தாய்.

அடடா…

எல்லா ஊர்களிலும்

அம்மனுக்குக்

கஞ்சி ஊற்றுவார்கள்.

அங்கள் ஊரில்

அம்மனே கஞ்சி ஊற்றுகிறதே!

*************************

நீ உன் முகத்தில்

வந்து விழும் முடிகளை

ஒதுக்கிவிடும் போதெல்லாம்

உன் அழகு முகத்தை

ஆழையோடு பார்க்க வந்த

முடிகளை ஒதுக்காதே என்று

தடுக்க நினைப்பேன்.

ஆனால் நீ முடிகளை

ஒதுக்கிவிடுகிற

அழகைப் பார்த்ததும்

சிலையாக நின்று விடுகிறேன்.
*************************

நீ முகம் கழுவுகையில்

ஓடிய தண்ணீரைப் பார்த்துத்

திடுக்கிட்டுவிட்டேன் நான்.

ஒவ்வொரு நாளும்

அவ்வளவு அழகையா

வேண்டாமென்று

நீ நீரில் விடுகிறாய்

********************

அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.

*********************
‘நிலா ஏன்

தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?’

நீ அடிக்கடி

‘நேரமாயிடுச்சு போகணும்’ என்று

உன் வீட்டுக்குப்

போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவா

அதனால்தான்.

***********************************

உனக்கு வாங்கி வந்த

நகையைப் பார்த்து

‘அய்…எனக்கா இந்த நகை’

என்று கத்தினாய்.

நகையோ,

‘அய்…எனக்கா இந்தச் சிலை’

என்று கத்தியது.
***********************

தொலைபேசியில்

நீ எனக்குத்தானே ‘குட்நைட்’

சொன்னாய்.

ஆனால் இந்த இரவோ

அதைத்தான் நீ ‘நல்ல இரவு’

என்று

சொல்லிவிட்டதாக நினைத்து

விடியவே மாட்டேன் என்று அடம்

பிடிக்கிறதே

*****************************

அன்று

நீ குடை விரித்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

நின்றுவிட்ட மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று

சட்டென்று மழை நின்றால்

நீ எங்கோ குடை விரிப்பதாகவே

நினைத்துக் கொள்கிறேன்.

***********************
நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்…

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது

*********************

நான் வழிபட

இந்த உலகத்தில்

எத்தனையோ கடவுள்கள்

இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற

இந்த உலகத்தில்

எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,

நான் காதலிக்க

இந்த உலகத்தில்

நீ மட்டும்தான் இருக்கிறாய்.

*****************************

சிந்திய மழை

மீண்டும் மேகத்துக்குள் போவதில்லை

ஆனால்,

ஒவ்வொரு முறையும்

நீ சிந்தும் வெட்கமெல்லாம்

மீண்டும்

உன் கன்னத்துக்குள்ளேயே

போய்விடுகிறதே.

************************

உன் பெயரில் உள்ள

இரண்டு எழுத்துக்களைத் தவிர

தமிழில் மிச்சமுள்ள

245 எழுத்துக்களும்

தினமும் புலம்புகின்றன.

‘உனக்கு யார்

இரண்டெழுத்தில் பெயர் வைத்தது’ என்று.

********************************

தான் வரைந்த ஓவியத்தை

கடைசியாக ஒரு முறை

சரி செய்யும் ஓவியன் போல

நீ ஒவ்வொரு முறையும்

உன் உடையைச் சரி சய்கிறாய்.

********************************

காற்றோடு விளையாடிக்

கொண்டிருந்த

உன் சேலைத் தலைப்பை

இழுத்து

நீ இடுப்பில்

செருகிக்கொண்டாய்

அவ்வளவுதான்…

நின்றுவிட்டது காற்று.

***************************

என்னை ஒரு

குடுகுடுப்பைக்காரனாய்

நினைத்துக்கொண்டு

ஓர் அதிகாலையில்

உன் வீட்டு முன் நின்று

‘இந்த வீட்டில் ஒரு தேவதை

வாழ்கிறது’

என்று கத்திவிட்டு

குடுகுடுவென

நான் ஓடிவந்திருக்கிறேன்

***************************

நான்

உன்னைக் காதலிக்கிறேன்

என்பதற்காக

நீயும் என்னைக்

காதலித்துவிடாதே!

என் கொடிய காதலை

உன் பிஞ்சு இதயத்தால்

தாங்க முடியாது

**********************

மழை வந்து

நின்ற பிறகும்

செடிகள் வைத்திருக்கும்

மழைத்துளிகளைப் போல

என் அறை வைத்திருக்கிறது

நீ வந்து போன பிறகும்

உன்னை.

********************

எல்லா தெய்வங்களும்

தங்களைக் குளிப்பாட்டிவிட

பூசாரி வைத்திருக்கும்போது

நீ மட்டும் ஏன்

நீயே குளித்துக்கொள்கிறாய்?

**************************

புத்தர் இந்த உலகத்தில்

தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்தாய்

*******************

கரையில் நின்றிருந்த

உன்னைப் பார்த்ததும்

கத்திவிட்டன

கடல் அலைகள்…

‘கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து

கடைசியில் பறித்தே

விட்டோமா

நிலவை!’ என்று

*******************

ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னை காட்டி

என்னிடம் கேட்கிறது…

‘ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே

இருக்கிறது?’ என்று!

*******************

உன் பிறந்த நாளையும்

பிறந்த நேரத்தையும்

காட்டுகிற ஒரு கடிகாரம்

என் அறையிலிருக்கிறது.

‘கடிகாரம் ஓடலியா?’-என

யாராவது கேட்டால்

சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம் அல்ல

என் காதல் கடிகாரம்!

********************

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook