ஒரு குட்டி கதை --- படிச்சுப் பாருங்களேன்
8/24/2013 03:46:00 PMஒரு விவசாயி தன் நிலத்தை பாதுகாத்து, மிக நன்றாக பராமரித்து வந்தான்.... தன் வாழ்கை முறைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் அவன் தென்னை, மா, பலா, வாழை என பயரிட்டான்... விவசாயம் உயிர் பிழைக்க தன் நிலத்தில் தக்க இடம் தேடி, ஊர் பஞ்சாயத்தார் அனுமதியுடன் பெரிய கிணறொன்றும் வெட்டினான்... அக்கம் பக்கத்து நிலத்தோருக்கு தன்னால் இயன்றதை கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்தான்....
ஒரு சமயம் அந்த ஊரில் வேறு சில இடங்களில் பிரச்சனை எழுந்த காரணத்தால், ஊர் பஞ்சாயத்து அனைவருக்கும் ஒரு கட்டளை இட்டது - அதாவது ஒவ்வொருவரும் தன் நிலம் சுற்றி வேலி கட்டாயம் போட வேண்டும் - இதனால் எதிர் காலத்து பிரச்சனைகள் சுலபமாக கையாட படும் என்று..
இதன் படியே, நம் விவசாயி தன் நிலம் சுற்றி வேலி அமைக்க ஆயத்தம் ஆனான்... அப்பொழுது பக்கத்தில் உள்ள ஒரு சிறிய நிலத்தின் சொந்தக்காரன் ஒருவன் ஒரு கோரிக்கை விடுத்தான் - "அய்யா - என்னுடைய தென்னை சில வளைந்து உங்கள் நிலம் வரை வருகின்றன - இதனால் வேலி இட்டால் என்னால் அன்றாடம் அதிலிருந்து தேவையான வற்றை எடுக்க இயலாது - நானோ சிறிய நிலத்து காரன்.. என் பொழப்பு கெட்டு போயிடும்... அதனால் உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன்... என் தென்னை மரங்கள் எதுவரை வருகின்றனவோ, அங்கு நாம் வேலி இட்டு கொள்ளலாம் -- வேலி போட்டதனால் அது என் நிலம் ஆகி விடாது - உங்களுடையது தான் - இது நம்மில் ஒரு உடன் படுக்கை...."
நம் விவசாயி தான் இரக்க குணம் கொண்டவன் அல்லவா - சரி என்று ஒப்பு கொண்டான்... வேலி போட ஆரம்பித்த உடன் தான் அவனுக்கு உரைத்தது, இப்பொழுது அவனுடைய வாழ்வாதாரமான கிணறு அவன் வேலிக்குள் வர வில்லை என்று... இந்த கேள்வி எழுந்த உடன் பக்கத்து நிலத்துக்காரன் சொன்னான் - "அய்யா... நான் தான் சொன்னேன் ல நிலம் உங்களுடையது தான்... நீங்க வேலி ல ஒரு பாதை போட்டுகோங்க... அது வழியா வந்து கிணத்தை உபயோக படுத்தி கோங்க.... கிணறு சற்று தூரத்துல இருந்தாலும் தண்ணி பாய்ச்சுறது உங்களுக்கு எப்பொழுதும் போல தான் - எனக்கு தான் தென்னை மரம் உள்ள இருக்கணும் "... அப்படி இப்படி னு ஏதேதோ சொன்னான்.... இதையும் ஒத்துக்கொண்ட நம்ப விவசாயி, நம்ப பக்கத்து வீட்டு காரன் தானே... ஒன்னுக்குள்ள ஒன்னு... போகட்டும் னு சம்மதிச்சான்....
வேலியும் போட்டாச்சு.... கிணத்து தண்ணி நம்பாளுக்கு போயிகிட்டு இருந்தது... இந்த உடன் படுக்கை ஊர் பஞ்சாயத்துக்கும் தெரிந்திருந்தது...
வருடங்கள் ஓடின ...பஞ்சாயத்தாரும் மாறி விட்டன....
ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு, மனுஷன கடிச்ச கதையா கெஞ்சி கேட்டுகிட்ட பக்கத்து நிலத்து காரன், இப்போ கிணறு எனக்கு தான் சொந்தம்.. அத நான் என்ன வேணும்னாலும் பண்ணலாம்... என் குழந்தைங்க தவறி அதுல விழ வாய்பிருக்கு - அத தடுக்க அத மூடனும்.. பக்கத்துல வேற கிணறு எழுப்பிக்கிறேன் அப்படி இப்படி னு பிரச்சனை பண்றான்....
நம்மாள் சொல்றான் - "டேய் அந்த கிணறு என் வாழ்வாதாரம் டா "னு... பக்கத்து வீட்டு புத்திசாலி சொல்றான் - "அந்த கிணறு ல என் வீட்டு குழந்தைங்க விழுந்துரும் "னு.. நம்ப இளிச்சவாயன் க்கு என்ன பண்றதுனே புரியல.... பஞ்சாயத்தாரிடம் கொண்டு போனான்....
பஞ்சாயத்து இழுத்து கிட்டே போனது... அதுக்குள்ள இங்க சண்டையும் பெருசானது...
விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதை அண்ட் ராமன் கசின்ஸ் னு சொன்ன மாதிரி - ஒரு நாள் திடீரென்று பஞ்சாயத்தார் நம்பாளு கிட்ட அஸ்திவாரத்தையே அசைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டனர் --
" அந்த கிணத்தில் நீ உரிமை கோர முடியுமா ? "
# செய்தி : முல்லை பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியுமா ? - சுப்ரீம் கோர்ட் கேள்வி
- ரா. ராஜகோபாலன்

0 comments