, ,

GMO..... மரபணு மாற்றுப் பயிர்.

8/24/2013 02:49:00 PM

அதாவது ... .D N A வில் சில பல மாற்றங்கள் செய்து உருவாக்கப்படும் பயிரினங்கள்மற்றும் உயிரினங்கள் .
உதாரணத்திற்கு தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்.
பிறகு ..ஆப்பிள் பழம் இருக்கே அதை வெட்டி வைச்சா சிறிது நேரத்தில் காற்று பட்டவுடன் பிரவுன் நிறம் ஏற்படும் ,,இந்த மரபணு மாற்றம் மூலம் உருவானவற்றில் ..அப்படி வெட்டி வைத்தாலும் நிறம் மாறாமலிருக்க சில பல மரபணு சித்து வேலைகளை செய்திடுவாங்க ..

//Browning in apples and potatoes results from polyphenol oxidase (PPO), an enzyme that produces melanin, a compound that contains iron and gives cells a brown tint. To create Arctic apples, Okanagan scientists silenced the apples' PPO genes by inserting a man-made gene that contains portions of four natural PPO genes.

As a consequence, Arctic apples produce less than ten percent of the PPO produced by conventional apples and therefore do not brown when sliced.//



சமீபத்தில் வெளிவந்த செய்தி
SOURCE :-http://www.peoplemovers.com/ideas/keep-genetically-modified-bananas-out-of-india-40
//Billionaire Bill Gates and Australian scientist James Dale are pushing for unnatural genetically modified (GMO) bananasand have started a "creation myth" by claiming their GMO bananas are an "innovation" to save Indian women from child birth deaths due to iron deficiency anaemia. //

த்சோ !!!த்சோ !!!! யப்பப்பா ...எங்க நாட்டு பெண்கள் தான் கிடைச்சாங்களா உங்களுக்கு ..நாங்க என்ன LAB எலிகளா ???

இப்படிதான் பிலிப்பைன்சில் பீட்டா கரோட்டின் உள்ள கோல்டன் அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றுGMO வகை அரிசியை பயிரிட்டார்கள்

//Golden Rice is genetically modified with genes coming from bacteria and corn to produce beta carotene. Proponents said that Golden Rice will be used to address Vitamin A Deficiency or VAD//

..எதற்கு தெரியுமா ? பிலிப்பைன்சில் பசிப்பிணி மற்றும் ஊட்டக்குறை அல்லது ஊட்டச்சத்துக்குறைபாடு ஆகியவற்றால் பால்ய வயது குழந்தைகள் மரணிக்கிறார்கலாம் அதற்க்கு இவங்க GMO மூலம் உதவிக்கரம் நீட்ட முற்பட்டிருக்கிறார்கள்

விளைவு என்ன நடந்தது !!!!!!

இரவோடிரவாக பொதுமக்கள் அத்தனையையும் வெட்டி சாய்ச்சிட்டாங்க :))

இந்த மகா கனவான்கள் ..பெரிய ஜாம்பவான்கள் எதையாகிலும் செய்து கொள்ளட்டும் அல்லது கொல்லட்டும்!! அவர்கள் நாட்டில் உள்ளவர்களை ..ஆடு நனைகிறதே என்று அழும் ஓநாய் போல அல்லது தனது உடலில் உள்ள அதிகப்படியான உப்பை கண்ணீர் மூலம் வெளியேற்றும் முதலை போல தனது சுய லாபத்துக்கு அப்பாவி ஏழை நாடுகளில் இவர்களின் வேலைகளை காட்ட வேண்டாம் ..



எல்லா விஷயமும் அமெரிக்காவில் தானே நடைபெறுது நமக்கொன்றும் பிரச்சினை இல்லை என்று நினைக்க வேண்டாம் ..நம் நாட்டில் விளையும் 95%பருத்தி ..பிடி பருத்தி .B.T COTTON

//Just as Bt cotton has taken over 95% of cotton in India despite having failed to increase yields or control pests, GMO bananas will take over and destroy our rich biodiversity, even though they will fail to remove iron deficiency. //

ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒரு அப்பாவி விவசாயியின் தற்கொலை எதனால் என்பதையும் சிந்தியுங்கள் .


இந்த மான்சாண்டோ GMO பற்றிய விவரங்கள் அவ்வப்போது பகிர்கின்றோம் ..

- Pasumai Vidiyal

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook