ஜெயா, அதிருப்தி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களை அ.தி.மு.க விற்கு ஓட்டுப்போடவைத்து கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக அனுமதித்ததிலிருந்தே இவர்கள், அ.தி.மு.க மற்றும் தி.மு.க வுக்கு மாற்றாக மூன்றாவது சக்தி வளர்வதைத் தடுப்பதில் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளார்கள் என்பது விளங்கும். இதில் தி.மு.க வை அழிப்பதுதான் தங்களது முதல் கடமைபோல பீத்தல் வேறு...தி.மு.க வும் ஏதோ சட்டசபை தேர்தல் போல ஜெயா ஆட்சியின் அவலங்கள் பாரீர் என்று அலப்பரை வேறு .மக்களின் பார்வையை தேசியத்திலிருந்து திசை திருப்புகிறார்களாம். மக்கள் சட்டசபைத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குமான வித்தியாசத்தை நன்கு உணர்ந்துள்ளார்கள். ராகவன் ஜி சொன்னதுபோல் மக்கள், பிரச்சனைகளுக்கான தீர்வை தருபவர்களை எதிர்பார்க்கிறார்கள் நாடளுமன்றத்தில் வெற்றுக் கோசம்போடுபவர்களையோ கடிதம் எழுதுபவர்களையோ அல்ல. இந்த முறை தங்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பை மக்கள் நிச்சயம் பயன்படுதிக்கொள்வார்கள்... தாங்களே ஒருவருக்கொருவர் மாற்று என்ற இவர்களது மாயையான தோற்றம் இம்முறை முறியடிக்கப்படும் கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 4 முதல் 7 இடம்வரையே கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட ஆம் ஆத்மி இரண்டாவது சக்தியாக உருவெடுத்ததுபோல் இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் சக்தியாக மாறும். ஆனால் கேஜ்ரிவாலைப் போல் பொறுப்பிலிருந்து பா.ஜ.க கூட்டணி ஓடிவிடாது..
Thanks
Thamilselvan Subramaniam
20.04.2014
Thanks
Thamilselvan Subramaniam
20.04.2014