தேர்தல் களம் - 2014
4/20/2014 11:23:00 AMதேர்தல் அறிவிப்புக்கு பிறகு நடந்த தொலைக்காட்சி விவாதமேடைகளில் நாம் வளர்ச்சி பற்றி பேசுகையில் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பா.ஜ.க வை தீண்டத்தகாத கட்சியாகவும் ஒருமணி நேர விவாதத்தில் 50 முறையாவது மதவாதம் என குறிப்பிட்டு பேசினார்கள். கோபண்ணா போன்றவர்கள் 5 நிமிடத்துக்கு 50 முறை மதவாத கட்சி என்று பேசினார்கள். அவர்களது இந்த வாதம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை உணர்ந்து இப்பொழுது வளர்ச்சி பற்றி ஒப்பீடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது வழக்கமான, ஒருவன் இந்துவாக இருந்தாலோ, இந்து இயக்கங்களில் இருந்தாலோ அவர்கள் மதவாதிகள். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் இயக்கங்களை உடன் வைத்துக்கொண்டால் அவர்கள் மதசார்பற்றவர்கள் என்ற நாடகம் இந்தமுறை எடுபடவில்லை. மாறாக அவர்களின் வெறுப்பு அரசியலை மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். அவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களை முன்வைக்காமல் பா.ஜ.க குறித்த அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தி அதன்மூலம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வெற்றிபெறும் அவர்களது எண்ணம் இந்த முறை நிறைவேறாது....!
Thamilselvan Subramaniam
20.04.2014
Thamilselvan Subramaniam
20.04.2014
0 comments