வெறுப்பு அரசியலும் போலி மதச்சார்பின்மையும்.....
4/20/2014 12:10:00 PMஅது 1998 ஆம் ஆண்டு. வாக்களிக்கும் தகுதி பெற்ற அந்த ஆண்டு, நானும் என் சகோதரரும் விவாதித்து பா.ஜ.க வில் எங்களை இணைத்துக்கொண்டோம் என்றாலும் நான் தீவிர களப்பணியில் ஈடுபடவில்லை.அரசியல் குறித்த என் நிலைபாட்டினை என் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் அதிகம் வெளிப்படுத்தியதும் இல்லை. கட்சியில் உறுப்பினராக 15 ஆண்டுகளாக இருந்தாலும் வெறும் பார்வையாளராகவே இதுவரை இருந்துள்ளேன். என்று களப்பணிக்கு செல்கின்றேனோ அன்று மக்களிடையேயும் என் அனைத்து தொடர்புகளிடையேயும் விரிவான தொலைநோக்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
ஆனால் இந்த தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் நடைபெறும் விவாதங்களிலும், செய்யப்படும் பரப்புரைகளிலும் நடுநிலை இலக்கியவாதிகள் (?) எழுத்தாளர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டதின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இந்த தேசத்தை நிரந்தர வெறுப்பு அரசியலை நோக்கி இட்டுச்செல்லும். அவர்களின் எண்ணம் நிறைவேற அனுமதிக்ககூடாதது மட்டும் அல்ல அத்தகைய சக்திகளின் முகத்திரையை கிழித்து முற்றிலும் அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும். ஏன் ? எதற்காக ? என்பவனவற்றை எனது அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக நானறிந்தவரையில் எழுத உள்ளேன். உங்களது ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
Thamilselvan Subramaniam

0 comments