மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

7/16/2014 09:58:00 PM

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்குசெல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்.

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook