ஜெயா, அதிருப்தி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர்களை அ.தி.மு.க விற்கு ஓட்டுப்போடவைத்து கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக அனுமதித்ததிலிருந்தே இவர்கள், அ.தி.மு.க மற்றும் தி.மு.க வுக்கு மாற்றாக மூன்றாவது சக்தி வளர்வதைத் தடுப்பதில் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளார்கள் என்பது விளங்கும். இதில் தி.மு.க வை அழிப்பதுதான் தங்களது முதல் கடமைபோல பீத்தல் வேறு...தி.மு.க வும் ஏதோ சட்டசபை தேர்தல் போல ஜெயா ஆட்சியின் அவலங்கள் பாரீர் என்று அலப்பரை வேறு .மக்களின் பார்வையை தேசியத்திலிருந்து திசை திருப்புகிறார்களாம். மக்கள் சட்டசபைத் தேர்தலுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குமான வித்தியாசத்தை நன்கு உணர்ந்துள்ளார்கள். ராகவன் ஜி சொன்னதுபோல் மக்கள், பிரச்சனைகளுக்கான தீர்வை தருபவர்களை எதிர்பார்க்கிறார்கள் நாடளுமன்றத்தில் வெற்றுக் கோசம்போடுபவர்களையோ கடிதம் எழுதுபவர்களையோ அல்ல. இந்த முறை தங்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பை மக்கள் நிச்சயம் பயன்படுதிக்கொள்வார்கள்... தாங்களே ஒருவருக்கொருவர் மாற்று என்ற இவர்களது மாயையான தோற்றம் இம்முறை முறியடிக்கப்படும் கடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 4 முதல் 7 இடம்வரையே கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட ஆம் ஆத்மி இரண்டாவது சக்தியாக உருவெடுத்ததுபோல் இம்முறை தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் சக்தியாக மாறும். ஆனால் கேஜ்ரிவாலைப் போல் பொறுப்பிலிருந்து பா.ஜ.க கூட்டணி ஓடிவிடாது..
Thanks
Thamilselvan Subramaniam
20.04.2014
Thanks
Thamilselvan Subramaniam
20.04.2014
அம்மையார் ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 15 வார்டில் நாலாவது குறுக்குச்சந்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. சென்னையில் 30 வார்டில் 18 வது குறுக்குச்சந்தில் குப்பை அள்ளவில்லை எனவே எங்களை நாடளுமன்றதிக்கு தேர்ந்தெடுத்தால் அந்த பிரச்னையை தீர்த்துவைபோம் எனவே எங்களுக்கு ஓட்டளியுங்கள் - தி.மு.க
தலிவரே இந்த பொங்கலை 2016 சட்டசபை தேர்தல்ல வச்சுக்கலாம்.....! மணிமேகலை தலைமையிலான ஒன்பதுவருட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீங்க செய்த சாதனைய சொல்லி (அதுதான் ராஜா செய்த புரட்சி போன்றவற்றை ) ஓட்டு கேட்கலாமே...அடுத்து காங்கிரஸ் பா.ஜ.க அல்லாத நீங்கள் சுட்டிக்காட்டும் நபர் பிரதமராக வரும்போது (?) மக்களுக்கு (பொது மக்களுக்கு தாங்க...!) என்ன செய்ய நினைகிறீங்களோ அதை தேர்தல் விளம்பரமா போடலாமே...
அது 1998 ஆம் ஆண்டு. வாக்களிக்கும் தகுதி பெற்ற அந்த ஆண்டு, நானும் என் சகோதரரும் விவாதித்து பா.ஜ.க வில் எங்களை இணைத்துக்கொண்டோம் என்றாலும் நான் தீவிர களப்பணியில் ஈடுபடவில்லை.அரசியல் குறித்த என் நிலைபாட்டினை என் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் அதிகம் வெளிப்படுத்தியதும் இல்லை. கட்சியில் உறுப்பினராக 15 ஆண்டுகளாக இருந்தாலும் வெறும் பார்வையாளராகவே இதுவரை இருந்துள்ளேன். என்று களப்பணிக்கு செல்கின்றேனோ அன்று மக்களிடையேயும் என் அனைத்து தொடர்புகளிடையேயும் விரிவான தொலைநோக்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
ஆனால் இந்த தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் நடைபெறும் விவாதங்களிலும், செய்யப்படும் பரப்புரைகளிலும் நடுநிலை இலக்கியவாதிகள் (?) எழுத்தாளர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டதின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இந்த தேசத்தை நிரந்தர வெறுப்பு அரசியலை நோக்கி இட்டுச்செல்லும். அவர்களின் எண்ணம் நிறைவேற அனுமதிக்ககூடாதது மட்டும் அல்ல அத்தகைய சக்திகளின் முகத்திரையை கிழித்து முற்றிலும் அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும். ஏன் ? எதற்காக ? என்பவனவற்றை எனது அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக நானறிந்தவரையில் எழுத உள்ளேன். உங்களது ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
Thamilselvan Subramaniam
ஆனால் இந்த தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் நடைபெறும் விவாதங்களிலும், செய்யப்படும் பரப்புரைகளிலும் நடுநிலை இலக்கியவாதிகள் (?) எழுத்தாளர்கள் மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டதின் கருத்துக்கள் மற்றும் அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் இந்த தேசத்தை நிரந்தர வெறுப்பு அரசியலை நோக்கி இட்டுச்செல்லும். அவர்களின் எண்ணம் நிறைவேற அனுமதிக்ககூடாதது மட்டும் அல்ல அத்தகைய சக்திகளின் முகத்திரையை கிழித்து முற்றிலும் அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும். ஏன் ? எதற்காக ? என்பவனவற்றை எனது அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக நானறிந்தவரையில் எழுத உள்ளேன். உங்களது ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
Thamilselvan Subramaniam
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு நடந்த தொலைக்காட்சி விவாதமேடைகளில் நாம் வளர்ச்சி பற்றி பேசுகையில் காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் பா.ஜ.க வை தீண்டத்தகாத கட்சியாகவும் ஒருமணி நேர விவாதத்தில் 50 முறையாவது மதவாதம் என குறிப்பிட்டு பேசினார்கள். கோபண்ணா போன்றவர்கள் 5 நிமிடத்துக்கு 50 முறை மதவாத கட்சி என்று பேசினார்கள். அவர்களது இந்த வாதம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை உணர்ந்து இப்பொழுது வளர்ச்சி பற்றி ஒப்பீடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது வழக்கமான, ஒருவன் இந்துவாக இருந்தாலோ, இந்து இயக்கங்களில் இருந்தாலோ அவர்கள் மதவாதிகள். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் இயக்கங்களை உடன் வைத்துக்கொண்டால் அவர்கள் மதசார்பற்றவர்கள் என்ற நாடகம் இந்தமுறை எடுபடவில்லை. மாறாக அவர்களின் வெறுப்பு அரசியலை மக்கள் நன்கு புரிந்து கொண்டார்கள். அவர்கள் மக்களுக்கு செய்த நன்மைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்களை முன்வைக்காமல் பா.ஜ.க குறித்த அச்சத்தை மக்களுக்கு ஏற்படுத்தி அதன்மூலம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி வெற்றிபெறும் அவர்களது எண்ணம் இந்த முறை நிறைவேறாது....!
Thamilselvan Subramaniam
20.04.2014
Thamilselvan Subramaniam
20.04.2014






