கூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் இடத்தை கண்டறிய

2/27/2013 12:22:00 PM

உலகில் மிகப்பெரிய ரயில் நிறுவனங்களுள் இந்திய ரயில்வேதுறையும் ஒன்று. சமீப காலமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் மேப் உதவியுடன் இந்திய ரயில்கள் தற்போது பயணித்து கொண்டிருக்கும் வசதியை அளித்துள்ளது.

இதற்காக Rail Radar என்ற புதிய தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த தளத்தில் சுமார் 6500 பயணிகள் ரயில்களின் விவரத்தை கண்டறிய முடியும். ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் இந்த தளம் தானாகவே தகவல்களை புதிப்பித்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம். இந்தியா முழுவதும் அமைத்துள்ள சுமார் 6000 க்கும் அதிகமான ரயில் தகவல் மையங்களில் இருந்து தகவல்களை தானியங்கியாகவே சேகரித்து தகவல்களை தருகிறது.

இந்த தளத்திற்கு Rail Radar சென்று உங்களுக்கு தேவையான ரயிலின் விவரத்தை கண்டறிய Zoom செய்து அந்த ரயில் ஐகான் மீது கிளிக் செய்தால் அந்த ரயில் கடைசியாக கடந்த ரயில் நிலையத்தையும் மற்றும் அடுத்து வர இருக்கும் ரயில் நிலையத்தையும் தெரிவிக்கும். அல்லது அதில் சைட்பாரில் உள்ள Search என்பதை அழுத்தி குறிப்பிட்ட ரயிலின் பெயரையோ அல்லது ரயில் எண்ணையோ கொடுத்தால் அந்த ரயிலின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் இந்த தளத்தின் மூலம் லோக்கல் ரயில்களின் விவரங்களை கூட அறிய முடிகிறது.

காலதாமதமான ரயில்களை சிவப்பு நிறத்திலும் சரியான நேரத்தில் செல்லும் ரெயில்களை நீல நிறத்திலும் இந்த தளம் பிரித்து காட்டுகிறது. பயனுள்ள இந்த சேவையை அனைவரும் விரும்புவர் என்பதில் சந்தேகம் இல்லை.

முகவரி - http://railradar.trainenquiry.com/

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook