ஒருங்கிணைந்த தேசம்!

2/13/2013 03:05:00 PM

உறவுகளின் பிரிவின் வலி என்னவென்று எல்லாருக்கும் தெரியும். அது யாரோ ஒருவருக்கு நடந்தாலே பலருக்கும் கலங்கி விடுகிறது. ஒரு தேசமே உடைந்துபோனால் எப்படி இருக்கும்? 
அதுதான் ஜெர்மனியின் கதையில் நடந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பல்வேறு சிற்றரசுகளை கொண்டு இருந்த ஜெர்மனியை வென்று ஓரளவிற்கு இணைத்து இருந்த நெப்போலியனின் பணியை பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் பிஸ்மார்க் முயற்சியால் ஒருங்கிணைந்த ஜெர்மனியை உருவாக்கி ஒரு தேசம் என்கிற வடிவத்தை கொடுத்தார்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லர் ஆடிய ருத்ரதாண்டவம், அதற்கு பின் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட பனிப் போர் ஜெர்மனியை கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியாக பிரிந்து போனது உச்சபட்ச சோகம். இதில் இன்னமும் வலியின் அடையாளமாக பெர்லினை இரண்டாக வெட்டி செல்லும் பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது. தப்பித்துப் போக முயன்ற மக்கள் சுட்டுக்கொல்ல பட்டார்கள் - கண்ணீரோடு சுவர் எழும்புவதை மக்கள் பார்த்தார்கள். மனச்சுவர் என்னமோ ஏற்படவில்லை; எப்பொழுது இணைவோம் என காத்திருந்தார்கள் மக்கள்.
ஒருவழியாக ஹங்கேரி, செக் நாடுகள் தங்களின் எல்லைகள் வழியாக கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனி செல்ல வழி விட்டது எதிர்பாராத திருப்பம். சோவியத் யூனியன் தன் சிக்கலையே தீர்க்க முடியாமல் நின்றதும்,கோர்பசேவின் கனிவு மிகுந்த அணுகுமுறையும் ஜெர்மனியை இணைக்க வழிவிட்டது.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வாழ்ந்த மக்கள் அன்னை மண்ணையும், உறவுகளையும் கண்டு கண்ணீர் வடித்தார்கள் - பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது; தேசம் ஒன்றாக இணைந்தது. அந்த இணைப்புக்கான ஒப்பந்தத்தில் இரு ஜெர்மனிகளும் கையெழுத்திட்ட தினம் இன்று (பிப்.13). 
ஜெர்மனியின் இணைப்பை ஒட்டி பாடப்பட்ட மாற்றத் தென்றல் (wind of change ) எனும் கவிதையை வாசித்து பாருங்கள்...
"நாளைய குட்டிப்பிள்ளைகள்உங்களோடும் என்னோடும் கனவுகளை பகிரும் அந்த மந்திர தருணம் பொங்கும் மந்தகாச இரவுக்கு என்னை கூட்டிப்போங்கள்.மாற்றத்தென்றலை நாளைய குட்டிப்பிள்ளைகள்அனுபவிக்கும் மந்திர தருணம் பொங்கும் மந்தகாச இரவுக்கு என்னை கூட்டிப்போங்கள்!" 

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook