க்ரேட் இண்டியன் ஷெப்ஹேர்ட்
11/24/2013 08:43:00 PMநேற்று நண்பர் ஒருவர் வீட்டின் அருகே தெருவில் இருந்த நாய் குட்டி போட்டிருந்தது. நண்பரும் அதில் ஒரு கொழு கொழுவென்ற குட்டியை எடுத்து வந்து விட்டார். நான் அவரை சந்திக்க செல்கையில், அவரின் வீட்டிற்கு வேறொரு செல்வந்தர் நண்பரும் குடும்பத்தோடு காரில் வந்திருந்தனர். அந்த செல்வந்தரின் மனைவி மிக ஆடம்பரமாய் தெரிந்தார். இந்த நாய் குட்டியை பார்த்து which breed is this ? என்றார் ( இது எந்த ரக நாய் )
நண்பருக்கு இது நாட்டு நாய் என்று சொல்வதில் தயக்கம் அதற்குள் நான் குறுக்கிட்டு இது "Great Indian shepherd" என்றேன். (ஷெப்ஹேர்ட் என்றால் ஆட்டை மேய்பது ) அந்த பெண்மனி சற்றே அதிர்ச்சியானார். அப்படி ஒரு ப்ரீட் உள்ளதா ? என்றார்..
நான் ஜெர்மணியில் ஆடு மேய்த்த நாய்களை "ஜெர்மன் ஷெப்ஹேர்ட்" என்கிறோம், ஆஸ்த்ரேலியாவில் ஆடு மேய்த்த நாய்களை "ஆஸ்ட்ரேலியன் ஷெப்ஹேர்ட்" என்கிறோம். நம் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆட்டை மேய்ப்பதற்கு உதவிய நம் நாyகளை "க்ரேட் இண்டியன் ஷெப்ஹேர்ட்" என்று அழைப்பதில் தவறில்லையே என்றேன். அந்த பெண்மனி அமைதியாக சென்று விட்டார்.
அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு நம் சிந்தனைகள் சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆகியும் மாறவில்லை. சக இந்தியனுக்கு மதிப்பில்லை, இந்திய மொழிகளை மதிப்பதில்லை. நம் இந்திய பொருட்களை மதிப்பதில்லை, இந்திய தத்துவங்களை, கோட்பாடுகளை, அறிவியலை நாம் மதிப்பதில்லை. இப்படி தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில், நாம் நம் இந்திய மண்ணில் வாழும் இந்திய நாய்களையும் மதிப்பதில்லை.
ஐம்பதாயிரம் கொடுத்து இந்த வெள்ளைக்கார நாய்களை வாங்கும் பலர், தன் பக்கத்து தெருவில் உள்ள நாய்களை வளர்க்க தயங்குகிறார்கள். நம் இந்திய நாய்கள் மிகச் சிறந்த ரகங்கள். பல ஆயிரம் கொடுத்து ஹட்ச், அல்சேஷன், லேபர்டார் என்று வெளி நாட்டு ரகங்களை வளர்ப்பதை விட, நம் மண்ணில் நம்மோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வசிக்கும் மிகச் சிறந்த இந்திய நாய்களை வளர்ப்போம். நம் சூழ்நிலைகளுக்கும், நம் உணவு வகைகளுக்கும் அவை மிகச் சிறந்தவை. மிகவும் அறிவுள்ளவை, விசுவாசமானவை
யாரேனும் பேர் கேட்டால் "க்ரேட் இண்டியன் ஷெப்ஹேர்ட்" என்று மட்டும் சொல்லி விடுங்கள். அவர்கள் தலையில் குட்டியது போல் இருக்கும்.
Courtesy
https://www.facebook.com/enlightened.master.3

0 comments