மருத்துவத் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அண்டை அயல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றில் பெரும்பான்மையானவற்றுக்கு முன்னோடியாக இருப்பது இந்திய புராதன மருத்துவ முறையாகவே உள்ளது. மருத்துவ முறைகளில் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதில் முக்கியமானவர் சுஸ்ருதர். இவர் கல் அடைப்பை நீக்குதுல், எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தைக் கண்டறிதல், திரை விழுந்து பார்வைக் குறைவு ஏற்பட்ட விழிகிளை அறுவை சிகிச்சையின் மூலம் குணமாக்குதல் போன்ற பல மருத்துவ முறைகளை அன்றைய காலத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளித்தவர். தற்போது நாம் பின்பற்றும் மருத்துவ முறை உருவாக பல ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருதர், பல்வேறு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். மூக்குடைந்த நபருக்கு கன்னத் தசைகளை அறுத்து எடுத்து வெண்கலக் குழாய்களை மூச்சுக் குழல்களாக அமைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு வலியை நோயாளிகள் உணராமல் இருப்பதற்காக திராட்சை ரசம் கொண்டு தயாரித்த மதுவை நோயாளிகளுக்குக் கொடுத்துள்ளார். இதனால், தற்போதைய அனஸ்தீஷியா மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற நவீன மருத்துவ முறைகளுக்கு சுஸ்ருதர் முன்னோடியாக இருந்துள்ளதாக உலகமே சுஸ்ருதரை பார்த்து வியக்கிறது. அந்த வகையில் ஒரு இந்துவாக நாம் இதற்கு பெருமைப்படலாம்.
0 comments