யாருக்காகவும் எதுக்காகவும் காலம் காத்துக்கிட்டிருக்காது.

1/28/2014 10:26:00 AM

யாருக்காகவும் எதுக்காகவும் காலம் காத்துக்கிட்டிருக்காது. அதுபாட்டுக்கு தன் வேலையை செவ்வனே செஞ்சுக்கிட்டு போயிக்கிட்டே இருக்கு. 27.1.14 காலை 8.40ன்னா... அந்த ஒரு நிமிஷம்தான். விட்டா... 8.41 வந்துரும். அப்படியே சரசரன்னு போயிக்கிட்டே இருக்கும். ஆனா நாமதான், நேத்திக்கி வேலையை இன்னிக்கி செய்யலாம்னு முடிவு பண்ணி, இன்றைய வேலையையும் நேற்றைய வேலையையும் மொத்தமா நாளைக்கி எடுத்துட்டுப் போய், பாவ மூட்டையை சேக்கறா மாதிரி, வேலைகளை செய்யாம அடுக்கிக்கிட்டே இருக்கோம். 
அதேபோல, வேலை மாதிரியே மனுஷாளோட கம்யூனிகேஷன்லயும் 'இப்ப பேசலேன்னா என்ன... நாளைக்கி பேசுவோம். இல்லியா அடுத்த வாரம் ஊருக்குப் போகும் போது பேசிப்போம். வரும் போது பேசிப்போம். அந்த வேலையா அவன்கிட்டப் பேசித்தானே ஆகணும். அப்ப பேசிப்போம்னு எதுனா ஒரு கணக்குப் போட்டு, தொடர்பு கொள்றதைக் கூட தள்ளி வைச்சுக்கிட்டுப் போயிக்கிட்டே இருக்கோம். 
நீங்க ஒருத்தருக்கு தர்ற மன்னிப்பா இருக்கட்டும். கேக்கற மன்னிப்பா இருக்கட்டும். செய்ற உதவியா ஆகட்டும். சொல்ற வாழ்த்தா இருக்கட்டும். முடிக்கிற வேலைகளா இருக்கட்டும். எல்லாமே அந்தந்த தருணத்துல செஞ்சு முடிச்சிட்டு, துண்டை உதறி தோள்ல போட்டுக்கிட்டு, போயிக்கிட்டே இருங்க... அடுத்த வேலையப் பார்த்துக்கிட்டு! 
சின்சியாரிட்டிங்கறதை, வேலைல, வீட்ல, நண்பர்களிடத்துல, உறவுகளுக்கு மத்தியிலன்னு எல்லா இடங்கள்லயும் கடைப்பிடிப்போம். எல்லாருக்கும் வணக்கம்.

Thanks to MrRamji Venkatraman

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook