அண்ணாத்தே உச்சா போய்ட்டாரு
1/17/2013 06:13:00 PMஇது நல்ல யோசனை ....நாமும் ஏன் பின்பற்றக்கூடாது....? ஆனால் சுகாதாரமான பொது கழிப்பறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்......... .......
அண்ணாத்தே உச்சா போய்ட்டாரு'... விசிலடிச்சு, டிரம்ஸ் அடிச்சு விரட்டும் கிராமங்கள்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்ட கிராமங்களுக்குப் போனால் பொது இடத்தில் மூச்சா போவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் கிராமப் பஞ்சாயத்துகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொண்டர் படையினர் உங்களைச் சுற்றி நின்று விசில் அடித்து, டிரம்ஸ் அடித்து ரொம்ப தர்மசங்கடப்படுத்தி விடுவார்கள்.
இந்த கிராமத்தில் ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதாவது பொது இடங்களில் பட்டப் பகலில் பப்பரப்பா என்று ஆண்கள் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நூதன முடிவை எடுத்தனர். இதற்காக தன்னார்வ தொண்டர் படையை உருவாக்கியுள்ளனர். அவர்கள் கையில் விசில் மற்றும் டிரம்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யாராவது பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதைப் பார்த்தால் இவர்கள் உடனே சம்பந்தப்பட்ட நபரிடம் போய் வாயில் விசிலை வைத்து ஊதியும், சுற்றி நின்று டிரம்ஸ் அடித்தும் அந்த நபருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார்கள்.
இப்படி விசில் ஊதுவதற்குக் காரணம், ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்க்கும்போது சிறுநீர் கழித்த நபருக்கு அடுத்தமுறை இப்படி பப்ளிக்காக மூச்சா போகும் எண்ணமே வராமல் திருந்து விடுவார் என்பதால்தானாம்.
அது மட்டுமல்லாமல், ஊரின் மையத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் மூச்சா போனவரின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றையும் சொல்லி, இன்னார் இந்த இடத்தில் இந்த மாதிரி மூச்சா போனார் என்றும் சொல்லி மானத்தைக் கப்பலேற்றி விடுவார்களாம்... அதாவது நம்ம ஊரில் கல்யாணத்துக்குப் போய் மொய் எழுதினால் பேரைச் சொல்வார்களே அது போல...
இந்த வித்தியாசத் திட்டத்தை மாவட்டத்தில் உள்ள 34 கிராமப் பஞ்சாயத்துக்களில் அமல்படுத்தவுள்ளனராம்.
Courtesy - oneindia.com

0 comments