படங்களில் மின்வெட்டை மையப்படுத்தி இந்த மாதிரியான காட்சிகள் வரலாம்...

1/17/2013 06:15:00 PM

இனி வரப்போற படங்களில் மின்வெட்டை மையப்படுத்தி இந்த மாதிரியான காட்சிகள் வரலாம்...

1) வில்லன் கடத்தி வச்சிருக்குற பையனோட ரூம் போட்டோவுல விளக்கு எரியற மாதிரி இருப்பதை வைத்து, தமிழ்நாட்டுல நேற்று மயிலாடுதுறையில மட்டும்தான் கரண்டு இருந்தது. அப்போ கடத்தல்காரங்க அங்கதான் இருக்கணும்னு போலீஸா இருக்குற அர்ஜூன் துப்பறியலாம்! :)

2) கரண்டு கம்பியில் ஜாலியா ஊஞ்சல் விளையாடிட்டு இருக்குற கதாநாயகனோட குழந்தையை, வ
ில்லனோட ஆட்கள், அந்த கரண்டு கம்பியில கரண்டை பாய்ச்சி குரூரமா கொல்ற மாதிரி வைக்கலாம்! :)

3) வெளிநாட்டிலிருந்து தன்னோட சிகரெட் லைட்டருல ஒளிச்சுவச்சு கரண்டை சட்டவிரோதமா கடத்திட்டு வர்ற வில்லனை, விஜயகாந்த் ஏர்போர்ட்டுல வச்சு மடக்குற மாதிரி சீன் வைக்கலாம்! :)

4) பாரதிராஜாவோட கிராமத்துக்கு புதுசா வர்ற டாக்டர், தான் கொண்டு வர்ற டார்ச்சை, இருட்டுல அடிச்சி வெளிச்சத்தைக் காட்டுறப்ப, அதை அந்த கிராமத்து மக்களெல்லாம் பார்த்து சந்தோஷத்தில், இருட்டு வெளிச்சத்தில் பாட்டு பாடி ஆடுறாங்க! மறக்காமல் அந்த வெள்ளை ட்ரெஸ் தேவதைகளும் பேக்ரவுண்டில்! :)

5) ஜூராஸிக் பார்க் டைரக்டரோட அடுத்த படத்துல, யாருக்கும் தெரியாத தீவில், 24 மணிநேரமும் ஜெகஜோதியா மின்சார வெளிச்சத்தில் ஜொலிச்சுக்கிட்டிருக்குற அதிசயமான ஒரு நகரத்தை காட்டலாம்! அங்க சுற்றுலா போறவங்க, அந்த கரண்டு கம்பிகளிடமிருந்து எப்படி தப்பிச்சு வந்தாங்கன்னு பிரமாண்டமா காட்டலாம்! :)

6) கவர்மெண்டோட கரண்டு கண்டுபிடிக்கிற பார்முலா எல்லாத்தையும் திருடி, ஒளிச்சு வச்சிருக்குற ஒரு நேர்மையில்லாத அரசாங்க அதிகாரியை, அடையாளம் கண்டுபிடிச்சு, அந்த அதிகாரியை அழிச்சு, அவரிடமிருந்து அந்த பார்முலாவை கைப்பத்துறதுதான் கதாநாயகனோட வேலை! இதுல அப்பா புள்ளை ரெண்டுமே சூர்யா பண்ணலாம்! :)

7) தமிழ்நாட்டோட மொத்த கரண்டும் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னையில இருக்குற மூணு ரவுடிகள் கையில தான் இருக்கு! அரசங்கமே அவங்க கிட்டயிருந்து தான் கடனா கரண்ட வாங்குது! இந்த உண்மை தெரிஞ்ச ஹீரோ விஜய் அவரோட பக்கத்து வீட்டு பிகருக்கு குழந்தை பிறக்கறப்ப, அந்த கிராமமே கரண்டால மினுங்கணும்கற சபதத்தோட கிராமத்துலயிருந்து புறப்பட்டு சென்னைக்கு வர்றாரு! மூணு ரவுடிகளையும் அழிச்சு, சூரசம்ஹாரம் பண்ணிட்ட பிறகு அவரோட பிகருக்கு தாலி கட்றப்ப என்டு கார்ட் போடுறோம்!

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook