வெற்றியாளன் எழுதிய வரலாற்றையே நமக்கும் கற்பித்து வருகின்றனர். எது உண்மை?! யாரறிவார்?!
1/09/2013 06:12:00 PM1915 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் லூசிடானா ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலால் சுட்டு வீழ்த்தப் பட்டது. இதில் கிட்டத்தட்ட 1200 பயணிகள் மாண்டு போயினர். இந்த ஒற்றைக் காரணத்தை மையமாக வைத்து தான், அதுவரை நடுநிலை வகித்த அமெரிக்கா, உலகப் போரில் குதித்தது.
உண்மை என்னவெனில், அந்தக் கப்பல் வேண்டுமென்றே போர் எல்லை என பிரகடனப் படுத்தப் பட்ட கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளது. மேலும் சர்வதேச விதிகளை மீறி, சக்திவாய்ந்த ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. இது பின்னாளில் மேற்கொள்ளப் பட்ட கடல் ஆராய்ச்சியிலும் நிரூபணம் ஆகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் இருந்த ஜேர்மன் தூதரகம் ´´ இந்தக் கப்பலில் பயணம் செய்பவர்கள் உயிருக்கும் உடைமைக்கும் பயனரே பொறுப்பு´´ என முன்கூட்டியே நாளேடுகளில் பகிரங்கமாக விளம்பரமும் செய்துள்ளது. விதிகளின் படி பார்த்தல் ஜெர்மன் மீது தவறில்லை.
அதேபோல் இரண்டாம் உலகப் போரில் அமேரிக்கா பங்கேற்றதற்குக் காரணம் முத்துத் துறைமுகம் தாக்குதல். ஏறத்தாழ 2500 பேர் பலியானார்கள். ஆனால் இந்தத் தாக்குதலை ஜப்பான் செய்யவேண்டிய நிர்பந்ததிற்குத் தள்ளியதே அப்போதைய அமெரிக்க சனாதிபதி ரூஸ்வெல்ட் என்கிறனர். ஜப்பான் மீது பொருளாதாரத் தடை விதித்தார். பல்வேறு ராஜிய உறவுகளை சிக்கலாக்கினார். இந்தோனேசியா, மலாயாவில் ஜப்பானியப் படைகள் முன்னேறிக் கொண்டிருந்த சமயம், ஹவாய் முத்துத் துறைமுகத்தில் ராணுவ தளத்தை வலுப்படுத்திக் கொண்டிருந்தார். அமெரிக்க மக்கள் போருக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருந்தமையால் , ஜப்பான் தான் முதலில் தாக்குதல் மேற்கொள்ளவேண்டும் என்ற வகையில் நடந்து கொண்டார். ஜப்பான் தாக்கியது , உடனே பெருவாரியான அமெரிக்க மக்கள் போருக்கான ஆதரவை தெரிவித்தனர், அமெரிக்கா போரில் குதித்தது.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் பயன்படுத்திய விமானப் படைகளுக்கு எரிவாயு வழங்கியது (விற்றது) அமெரிக்காவின் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம். ஏனெனில் அந்த விமானங்களுக்கு ஒருவித காப்புரிமை பெற்ற எரிவாயுதான் பயன்படுத்த வேண்டி இருந்துள்ளது. அந்த படைகள் தான் லண்டன் மீது சராமரி குண்டு மாரி பொழிந்துள்ளன. எத்தகைய முரண்பட்டு?!
இந்த இரண்டு போரிலும் அமெரிக்காவுக்கு கொள்ளை லாபம். போர் என்றாலே பலருக்கும் இன்னல், சிலருக்கு லாபம் தானே. அதிலும் குறிப்பாக அமெரிக்க தொழில் அதிபர்கள் பலருக்கும் லாபம். அன்று நிறுவப்பட்ட சம்பிராஜியம் இன்றைக்கும் உலகை ஆட்டிப் படைக்கிறது. இன்றளவும் அதே அமெரிக்க நிறுவனங்களின் லாப நோக்கிற்காகவே அமெரிக்க அரசின் நடவடிக்கைகள் இருப்பது கண்கூடு.
ஆக வரலாற்றின் போக்கையே தந்திரமாக மடைமாற்றம் செய்துள்ளனர். வெற்றியாளன் எழுதிய வரலாற்றையே நமக்கும் கற்பித்து வருகின்றனர். எது உண்மை?! யாரறிவார்?!

0 comments