நெஞ்சு பொறுக்குதிலையே
10/22/2013 06:27:00 PMஅது 1802ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 11ந்தேதி.கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கில அதிகாரி தூத்துக்குடியிலிருந்து வாராப்பூர் பொம்மு நாயக்கர்,ஒரு 15 வயது சிறுவன் உட்பட 76 பேரை நாடு கடத்தினான்.
அவர்கள் செய்த குற்றம்,வெள்ளையனை எதிர்த்து சுதந்திர முழக்கம் எழுப்பியது தான்.
எந்த மண்ணை தங்கள் உயிரினும் மேலாக நேசித்தார்களோ அந்த மண்ணிலே அவர்கள் நிழல் கூட விழாது செய்வதுதான் நாடு கடத்தலின் நோக்கம்.prince of whales தீவிற்கு ( இன்று பினாங்கு என்று அழைக்கப்படும் பகுதி ) 72 நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தனர்.வழியிலேயே 5 பேர் மரணம் அடைந்தனர்.5 மாதத்திற்குள் தீவில் 32 பேர், நிலவிய சூழ்நிலையின் கொடுமையின் காரணமாக மரணம் அடைந்தனர்.
18 வருடம் கழித்து கர்னல் வெல்ஷ் ஒய்வு எடுக்க prince of wales தீவிற்கு பயணம் ஆனான்.அங்கு அடைந்த அவனைக் காண முதுகு வளைந்து,கூனி குறுகி,உடல் நடுங்க தள்ளாடியபடிஒரு உருவம் வந்தது.
அருகில் வந்ததும் ,” வெல்ஷ் சவுக்கியமா..என்னைத் தெரிகிறதா “ என்று கேட்டான் குரலுக்கு சொந்தக்காரன்.வெல்ஷிற்கு தெரியவில்லை.” நான்தான் வெல்ஷ்..தொ..ர..சாமி , 18 வருடங்களுக்கு முன்பு ..தூத்துக்குடியிலிருந்து ..நாடு கடத்தினீர்களே...”. 15 வயது சிறுவனாக நாடு கடத்தப்பட்டவன்..சிறை வாசத்தின் கொடுமை காரணமாக அப்படி ஆகியிருந்தான்.”துரைசாமியா..!?” ,வெல்ஷ் திகைத்துப் போனான்.தன் ‘military reminiscences'(போர் கால நினைவுகள்)டைரியில் குறிப்பிடுகிறான்:” இப்படி யொரு கொடுமையா..என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”. அந்த துரைசாமி யார் தெரியுமா உங்களுக்கு...
மருது பாண்டியர்களில்..சின்ன மருதுவின் மகன்.
நம்மில் எத்தனை பேருக்கு இந்த வரலாற்று உண்மைத் தெரியும்,அந்த 76 பேர் மட்டுமல்ல..ஆயிரக்கணக்கானோர்..ப ாரத தேவியின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்துள்ளனர்.LET US SALUTE THE UNSUNG HEROES OF FREEDOM FIGHT !!.
இன்று சுதந்திர பாரதத்தில் நம் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்திற்காகவா இவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள் என்று எண்ணினால்,’ நெஞ்சு பொறுக்குதிலையே..’ என்று பாடத்தோன்றுகிறது......
அவர்கள் செய்த குற்றம்,வெள்ளையனை எதிர்த்து சுதந்திர முழக்கம் எழுப்பியது தான்.
எந்த மண்ணை தங்கள் உயிரினும் மேலாக நேசித்தார்களோ அந்த மண்ணிலே அவர்கள் நிழல் கூட விழாது செய்வதுதான் நாடு கடத்தலின் நோக்கம்.prince of whales தீவிற்கு ( இன்று பினாங்கு என்று அழைக்கப்படும் பகுதி ) 72 நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தனர்.வழியிலேயே 5 பேர் மரணம் அடைந்தனர்.5 மாதத்திற்குள் தீவில் 32 பேர், நிலவிய சூழ்நிலையின் கொடுமையின் காரணமாக மரணம் அடைந்தனர்.
18 வருடம் கழித்து கர்னல் வெல்ஷ் ஒய்வு எடுக்க prince of wales தீவிற்கு பயணம் ஆனான்.அங்கு அடைந்த அவனைக் காண முதுகு வளைந்து,கூனி குறுகி,உடல் நடுங்க தள்ளாடியபடிஒரு உருவம் வந்தது.
அருகில் வந்ததும் ,” வெல்ஷ் சவுக்கியமா..என்னைத் தெரிகிறதா “ என்று கேட்டான் குரலுக்கு சொந்தக்காரன்.வெல்ஷிற்கு தெரியவில்லை.” நான்தான் வெல்ஷ்..தொ..ர..சாமி , 18 வருடங்களுக்கு முன்பு ..தூத்துக்குடியிலிருந்து ..நாடு கடத்தினீர்களே...”. 15 வயது சிறுவனாக நாடு கடத்தப்பட்டவன்..சிறை வாசத்தின் கொடுமை காரணமாக அப்படி ஆகியிருந்தான்.”துரைசாமியா..!?”
மருது பாண்டியர்களில்..சின்ன மருதுவின் மகன்.
நம்மில் எத்தனை பேருக்கு இந்த வரலாற்று உண்மைத் தெரியும்,அந்த 76 பேர் மட்டுமல்ல..ஆயிரக்கணக்கானோர்..ப
இன்று சுதந்திர பாரதத்தில் நம் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்திற்காகவா இவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள் என்று எண்ணினால்,’ நெஞ்சு பொறுக்குதிலையே..’ என்று பாடத்தோன்றுகிறது......
0 comments