கம்போடியாவின் மிகப் பழமையான சிவாலயம்
10/22/2013 09:54:00 AMதலவரலாறு: கம்போடியாவின் பிரியாஹ் விகர் பகுதியில் அமைந்துள்ளது இந்த பழமையான சிவாலயம். நூற்றாண்டுகளைக் கடந்து காலத்தின் சின்னமாக நிலைத்து நிற்கும் இக்கோயிலின் முக்கிய தெய்வம் சிவபெருமான் ஆவார். 1958-ம் ஆண்டு, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் செயல்திறனை மேற்படுத்துவதற்காக யுனஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னமாக மாற்றப்பட்டது. 1962-ம் ஆண்டு உலக சமாதானத்திற்கு வழிவகுப்பதாகவும் இக்கோயில் அமைந்தது. அம்முயற்சியில் கம்போடியா வெற்றி பெற்றது. இருப்பினும் ஆரம்பத்தில் கட்டப்பட்ட கோயில் தீக்கிரையானது. கம்போடியாவில் நடந்த இரண்டு போர்களின் போதும் இக்கோயில் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க ராணுவம், மலை உச்சியில் அமைந்த இக்கோயிலின் இடத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தியது. 1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம், கடைசி வரை இக்கோயில் இடத்தை தர கம்போடிய அரசு மறுத்து விட்டது. அதன் விளைவாக இக்கோயிலின் சுற்றுச்சுவர்கள் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டது. 525 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் சிவ பெருமானுக்கு மட்டுமல்லாது, பிரம்ம தேவருக்கும் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 9-ம் நூற்றாண்டிலிருந்து இக்கோயிலின் கட்டிடப் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்றன. 12 முதல் 13-ம் நூற்றாண்டுகளில் இந்நாட்டை ஆண்ட கெமர் மன்னரின் காலத்தில் தாய்லாந்து முறைப்படி நவீனமயமாக இக்கோயில் கட்டப்பட்டது. 15-ம் நூற்றாண்டு வரை இக்கோயில் பல கலாச்சாரங்களை சார்ந்த மன்னர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தாலும், தாய்லாந்து நாட்டவர்கள் இக்கோயிலை இந்து சமய முறையிலேயே பராமரித்து வந்தனர். இக்கோயிலை அடிப்படையாகக் கொண்டு தாய்லாந்தின் பல பகுதிகளிலும் பல இந்துக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளது. 1904-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு எல்லைக்கோடு வரையறையின் போது இக்கோயில் தாய்லாந்து மற்றும் கம்போடிய எல்லையில் அமைந்திருந்ததால் இதனை பிரான்ஸ் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. 1962-ம் ஆண்டு கம்போடியா தனி நாடாக சுதந்திரம் பெற்றது. பின்னர் மீண்டும் கடல் எல்லை வகுக்கப்பட்ட போது கம்போடிய அரசிடம் பிரான்ஸ் இக்கோயிலை ஒப்படைத்தது. தாய்லாந்திடம் இருந்ததால் இக்கோயிலில் இருந்த மூன்று சிவலிங்கங்கள் காணாமல் போனது. 2007-ம் ஆண்டு யுனஸ்கோ அøப்பின் மூலம் இக்கோயில் மீண்டும் பண்டைய முறைப்படி உயிரூட்டப்பட்டது. இக்கோயிலின் சுற்றுச் சுவர் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த தாய்லாந்து அரசு யுனஸ்கோவின் தலையீட்டுக்கு பிறகு சமாதானம் அடைந்தது. மே 22-ம் தேதி நடைபெற்ற தாய்லாந்து- கம்போடியா அரசு பேச்சு வார்த்தைக்கு பிறகு கோயிலுடனான புதிய எல்லைக்கோடு கம்போடியாவிற்கு வகுக்கப்பட்டது.
0 comments