புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு.

10/20/2013 07:50:00 PM

இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெ...ற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்லீ எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார். சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.

‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’’ -நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது,நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவைலயின்றி, நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி. 25 வயதுவைர ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக! சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சனத் தம்பதியின் மகனாக, 1940-ல் பிறந்தார் புரூஸ்லி. குடும்பம் சீனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக்கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18-வது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலிஸ் பிரச்சனை ஏற்படேவ,பெற்றோர் அவரை சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.

அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லி, வாஷிங்டன் பல்கலைகழகத்தில் தத்துவம் படித்தார். கூடவே, சனத் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் ல-யின் ‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரேவற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலேமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.

1971-ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலெகங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியான Õஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்ல. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று டாக்டர்கள் சொன்னாலும், 33-வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவரை விடுபடேவ இல்லை. வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகைள உருவாக்குபவர்கேள சாதைனயாளர்கள் என்பது புரூஸ்லயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook