படித்ததில் பிடித்தது
12/15/2013 03:37:00 PMஒரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். “ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்!” என்றான். அவனை பரிசோதித்த மருத்துவர்…. “உங்கள் உடலில் எந்த கோளாறும் இல்லை. மனம் தான் சோகத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன இறுக்கம் அகன்றுவிடும். நம் நகரத்தின் மையத்தில் உள்ள மைதானத்தில் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் சர்க்கஸ் நடந்துவருகிறது. அதற்கு செல்லுங்கள். அந்த சர்கஸ்ஸில் கோமாளி ஒருவனின் வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவன் செயல்கள் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அதை பாருங்கள். வாய்விட்டு சிரிப்பீர்கள். உங்கள் மனம் லேசாகிவிடும். உங்கள் மன இறுக்கம் போயே போய்விடும்” என்றார் மருத்துவர். அதற்கு பதிலளித்த அந்த இளைஞன் : “சார்… அது முடியாத ஒன்று. காரணம் அந்த கோமாளி வேறு யாருமல்ல நான் தான்!” என்றானாம். சார்லி சாப்ளின் வாழ்வில் நடைபெற்ற உண்மையான நிகழ்ச்சி இது. மனம் ஏதோ வித பாரத்தில் சோகத்தில் இருக்கும். “அட என்னாச்சு நமக்கு? ஏன் இப்படி சோகத்துல இருக்கோம்?” என்று மண்டையை உடைத்து யோசிச்சாலும் காரணத்தை அறிந்து கொள்ள முடியாது. ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி மாறிவிடும் இதோ இந்தக் கணம் கூட என்றார். -சாப்ளின் படித்ததில் பிடித்தது
0 comments