கீதை உபதேசம்

12/11/2013 07:22:00 PM

பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பகல் முழுதும் அர்ஜுனனுக்குத் தேரோட்டி னான் கண்ணன். அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில் ஓய்வெடுத்துக் கொள் வார்கள். பகல் முழுக்கப் போரிட்டக் களைப் பால் அர்ஜுனன் பாசறையில் படுத்து நன்கு உறங்குவான். ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டிக் களைத்திருந் தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ள மாட் டான். தேரிழுத்து ஓடிக் களைத்த குதிரைகள்மேல் கவனம் செலுத்துவான் கண்ணன். வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். குதிரைகளுக்கு இதமாயிருக்கும் பொருட்டு உடல் முழுதும் பிடித்துவிடுவான். கட்டுக் கட்டாக பச்சை அருகம்புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்து, அதைத் தன் பட்டுத் துண்டில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் கொள்ளை வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான். ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடக்கும். ஒரு நாள் அர் ஜுனனுக்கு நள்ளிர வில் விழிப்பு வந்து விட்டது. எழுந்து கண்ணன் தங்கியிருக் கும் பாசறைக்குச் சென் றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக் காமல் கண்ணன் எங்கு சென் றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன். இறுதியில் கண்ணன் குதிரைக் கொட்டிலில், குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரையாவது விட்டால் செய்ய மாட்டார்களா?'' என்றான். ""அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா? அது மட்டு மல்ல; இப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன்மார் அல்ல. நீ எஜமானன்; நான் நின் ஏவல் கேட்கும் சாரதி. ஆதலால் உன் கடமை போர் செய்வது; என் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்; மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மை யாக நடைபெற்றால்தான் போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன். கீதை உபதேசம் கேட்ட நாளைவிட இன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது. மறுநாள் முதல் தன் கடமையைச் சோர்வின்றிச் செம்மையாகச் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook