தபுசங்கர் ‍கவிதைகள் - I

10/04/2009 09:14:00 PM


தபுசங்கர் கவிதைகள்

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? இது அவரது முதல் கவிதை தொகுப்பு.அவற்றில் இருந்து சில(என்னால் முடிந்தவை).

"அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே
அழகாகத்தான் இறுக்கின்றன."

"உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ அவ்வளவு
ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேச வேண்டும் என்பதில்."

"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?."

"எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்."

"நீ சாய்வதற்க்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்."

"என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என்
காதலியாக வேண்டும் கடைசி வரை வராமல்
போனால் கூட ஒன்றுமில்லை."

"நீ விளக்கேற்றினாய்.
விளக்கு உன் முகத்தை ஏற்றியது."

"செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்."

"உனக்காகச் செய்ய நினைத்த எதையுமே
உன்னால்தான் செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது.வாழ்க்கை
யையும் கூட."

"உன் கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல் வாசனையல்லவா
வீசுகிறது."

"நீ அழு... சோகம் தங்காமலோ
வலியினாலோ அல்ல.சந்தோஷம்
தாங்க முடியாமல். ஆனால் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் என் மேல்தான்
விழ வேண்டும்."

"உன்னிடம் எந்த கெட்ட பழக்கமும் கிடையாதென்பது
எனக்கு மகிழ்ச்சிதான். எனினும் வருத்தமாய்
இருக்கிறது. நான் சொல்லி நீ விட ஒரு கெட்ட
பழக்கம்கூட இல்லையே உன்னிடம்."

"நாம் இருவரும் தனியாய் இருக்கையில்
இந்தக் கண்ணாடிக்கு ஏன் இத்தனை
கண்கள் முளைத்து விடுகின்றன."

"என்ன வேதனை... என் இரண்டு
இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு
முத்தம்தானே தர முடிகிறது."

"உன் காதலியாய் இருந்தவரையில் ... நான்
உடலால் ஆனவளாகதான் இருந்தேன். உன்
மனைவியாக ஆன பின்பே ... உன்
விரல்களால் ஆனவளாக ஆகிவிட்டேன்."

"உறக்கத்திலிருந்து சட்டென்று விழிப்பு வந்து
பர்த்தபோது ... அருகில் அமர்ந்து என்னையே
பர்த்துக்கொன்டிருந்தாய் நீ.
அப்புறம் விழிப்பு வராதா என்ன."


Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook