தபுசங்கர் கவிதைகள் ‍ - III

10/08/2009 11:36:00 PM

ரயில் பயணங்களின் போது...
வீட்டு ஜன்னல்களின் வழியே
கையசைக்கும் குழந்தைகளுக்கு
பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை

---------------------------------------------------------------

திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு
என்னகில்லையென்றாலும்
ஏதாவத்டு உணவகத்திலோ
மருந்தகத்திலோ
கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்
பேசாமல் வாங்கி வருபவனில்
நானும் ஒருவனே

---------------------------------------------------------------

எப்படியேனும்
எல்லோரிடமிருந்தும் தப்பித்து
வீடு வந்து கண்மூடினால்
என்னிடம் மாட்டிக் கொள்கிறேன்

---------------------------------------------------------------

நாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை
எந்தச் சலனமுமின்றி
எடுத்தெரிந்துவிட்டு
வேறு பூவைச் சூடிக் கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்

---------------------------------------------------------------

அவ்வளவு தொலைவிலிருந்து
குழந்தைகள் சாப்பிட உதவும்
நிலவில்
மனிதன் உயிர் வாழமுடியாது என்பதை
எப்படி நம்புவது?

---------------------------------------------------------------

'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்
'அ'-வுக்கு முந்திய எழுத்துக்களே

---------------------------------------------------------------

நான் யாரைப் பார்க்கப் போனாலும்
அவர் தனிமையில் இருந்துவிடக்கூடாதே
என்கிற பயம் எனக்கு
தனிமை
கலைக்கப்படுகிறபோது
ஏற்படும்
இழப்புகளை
நான் அறிவேன்

ன் இதயம்
பணயமாக இருக்கட்டும்
எனக்கு உன் காதலைக்
கடனாகக் கொடு.
அதற்கான வட்டியாக
தினமும் நான் உனக்கு
என் காதலைக் கட்டினாலும்
ஒரு மகா மோசமான
கந்து வட்டிக்காரியைப் போல
உன் இதயம் மூழ்கிவிட்டது
என்று
கடைசிவரை என் இதயத்தை
நீ திருப்பியே தராதே!
னக்கு லீப் வருடங்கள்
ரொம்பப் பிடிக்கும்
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு!

ல்லா உடைகளிலுமே
நீ கவிதைதான்
சேலை உடுத்தினாலோ
தலைப்புடன் கூடிய கவிதை!

Keywords: thabu shankar, thabu shankar books, thabu shankar kavithaigal, Tamil poem, தபுசங்கர் கவிதைகள், கவிதை, தபுசங்கர்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook