சந்திரசேகர் ஆசாத்

2/27/2015 09:51:00 PM


இன்று – பிப்ரவரி 27 – சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் அவர்களின் நினைவு நாள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சந்திர சேகர ஆசாத் அவர்களின் பங்கு அளப்பரியது...
நமக்கு சுதந்திரம் என்பது ஏதோ மகாத்மா காந்தி, நேரு, பட்டேல், நேதாஜி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் மட்டுமே போராடி வாங்கித் தந்ததில்லை. விடுதலை போரில் இந்த தலைவர்களின் பங்கு மகத்தானது என்றாலும் அவர்களால் மட்டுமே அது கிடைத்துவிடவில்லை.
இந்திய விடுதலை போரில் எத்தனையோ முகம் அறியா ஆன்மாக்களின் தியாகமும் உழைப்பும் அடங்கியிருக்கிறது.அப்படிப்பட்ட உத்தமர்களை இன்றைய தலைமுறையினர் மறந்துவரும் நிலையில், நாம் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போதாவது அவர்களை – அவர்களது தியாகங்களை – சற்று நினைவு கூர்வோம்.
அவர்களின் அருந்தொண்டுக்கு இந்த வையகத்தையும் வானகத்தையும் ஒருங்கே கொடுத்தாலும் கூட ஈடில்லை என்றாலும், நம்மால் முடிந்த மரியாதையை அவர்களுக்கு செய்வோம். ..
இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அவர் தன்னுடைய 15 வயதில் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் பெயர், தந்தைப்பெயர் மற்றும் முகவரியை கேட்டபொழுது அவர் முறையே “ஆசாத் (ஆசாத் என்றால் விடுதலை), சுதந்திரம் மற்றும் சிறை” என்றார். இதனால், கோபமுற்ற நடுவர், சந்திரசேகரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கு சந்திரசேகர ஆசாத், ‘நான் அப்படிக் கூறினால்தான், நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவீர்கள்’ என்றார். மேலும் கோபம் கொண்ட நடுவர், 15 பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டார். தண்டனையை வீரமுடன் ஏற்ற அவர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிபடுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.
காகோரி ரெயில் கொள்ளை வழக்கு,இதோடு, லாலாலஜதிராயின் கொலைக்கு பதிலடியாக ஆங்கிலேயே போலீஸ் அதிகாரிக்கு பதிலடி கொடுத்த வழக்கிலும் வரை பிடிக்க முடியாமல் பிரிட்டிஸ் போலீசார் மாவீரர் சநந்திரசேகர் ஆசாத்தை உயிருடனோ,பிணமாகவோ பிடித்து
கொடுப்பவர்களுக்கு அந்த காலத்திலேயே 5000-ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து
விளம்பரம் செய்யப்பட்டும் அவரை பிடிக்க முடியவில்லை.

லாகூர் நீதிமன்றத்தில் பகத்சிங்,ராஜகுரு,சுகதேவ் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆசாத், சிறைக் கதவுகளை உடைத்து தோழர்கள் மூவரையும் விடுதலை செய்து விடவேண்டும் என்ற சிந்தனையிலே குறியாய் இருந்து அதற்க்கான
செயல்களில் ஈடுபட்டு கொண்டுயிருந்த ஆஸாத்,முன்னால் தோழனும் நண்பனுமான ஒருவனை அலகாபாத் ஆல்பிரட் 1931ம்ஆண்டு பிப்ரவரி 27ம் நாள் காலை 10 மணிக்கு பூங்காவில் சந்திக்க சுக்தேவ் அவருடன் சென்றபோது, அந்த நண்பன் காட்டிக்கொடுத்ததால் பிரிட்டிஷ் காவல்துறையினர் ஆசாத்தை சுற்றி வளைத்தனர்.

சுக்தேவை தப்பிக்க விட்டுவிட்டு ஆசாத் நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரிட்டிஷ் காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவே கூறிக்கொண்டனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது..

மாவீரர் ஆசாத்தின் பத்து ஆண்டுகால புரட்சி போராட்ட வாழ்க்கையில் ஒருநாள்கூட போலீஸ்காரர்களால் பார்க்கவும்முடியவில்லை,தொடவும்
முடியவிலலை. பிடிக்கவும் முடியவில்லை,

ஆசாத் மீது இருந்த 28 பிடிவாரண்டு வழக்குகளிலும், போலீசார் அளித்த வாக்குமூலம் என்ன தெரியுமா????
சந்திரசேகர் ஆசாத்தை இந்தியநாடு பூராவிலும் தேடிவிட்டோம். அவரை கண்டு பிடிக்க எங்களால் முடியவில்லை.. என்பதே!!!!!!!!!
இந்த மாபெரும் வீரரின் தியாகத்தை அவரது நினைவு நாளில் போற்றுவோம். பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து நடந்துகொள்வோம்.
ஜெய் ஹிந்த்!

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook