,

அலர்ஜி-தடுப்பதெப்படி?

3/04/2015 11:46:00 PM


 அலர்ஜி இருப்பவர்களுக்கு சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
அறிகுறிகள்
* உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு கூட ஏற்படும்.
* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.
* குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி ஏற்படும்.
* அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
* சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
* சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.
* அமெரிக்காவில் 30-ல் ஒருவருக்கு அலர்ஜி இருக்கிறது. பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
* அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.
* வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்.
* முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

தடுப்பது எப்படி?
*அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.
* வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல் மேற்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.
* அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.
* நண்பர்கள், விருந்தினர் வீடுகளில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உங்களுக்கான உணவில் தவிர்க்க வேண்டியவை பற்றி கூறிவிடுங்கள். நீங்களாகவே தயார் செய்து எடுத்துச் சென்ற குழம்பை பயன்படுத்துவதும் சிறந்த வழிமுறை தான்.
* பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


This article originally published at https://www.facebook.com/AyurvedaandSiddhaMedicine

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook