, ,

மாற்றத்திற்கான அணுகுமுறை – V 2.0

11/25/2016 09:35:00 PM

                                                           (image from google)

வெற்றிக்கான நம் பயணத்தில் எவ்வாறெல்லாம் இடையூறு வரும் என்பதை கணிக்க இயலாது. நமது நோக்கத்தை நிறைவேறாமல் இதுவரை தடுத்து வந்த நமது அணுகுமுறையை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. வெறும் கற்பனையும், செயல்படுத்துவதற்கான நீண்ட பட்டியல் மட்டுமே போதாது. உறுதியான, தொடர் நடவடிக்கைகளும், நன்கு திட்டமிடலுடன் கூடிய செயலாக்கமும் தேவை. சுய முன்னேற்றத்திற்கான மாறுதல் வலி நிறைந்தது. ஆனால் ஒரே இடத்தில் தேங்கி நின்று நம் வாழ்வின் பல நாட்களை வீணடித்த வலியைவிட மாற்றத்திற்காக நாம் பெறும் வலி ஒன்றும் பெரிதல்ல.

சிறிய சிறிய இலக்குகளை நாம் அடையும்போது நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொடர்ந்து முன்னேறுவோம். பெரிய செயல்களை செய்யும் முன்னர் ஏற்படும் தோல்வி பற்றிய பயங்களை உதறுவோம். நாம் இப்பொழுது முன்பைவிட வலிமையானவர்கள். நம்மால் நமது வெற்றி இலக்கை அடைய முடியும்தொடர்ந்து முன்னேறுவோம்.

மாற்றத்திற்கான தேடலில் நாம் ஈடுபடும்போது, நம்மை அறியாமலே நமக்குள் நல்ல ரசனைத் தன்மையும், ஒவ்வொரு விசயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகும் விதமும் அதிகரிப்பதையும் உணர முடியும்தினமும் செல்லும் பாதையில் அன்றாடம் பார்த்தவற்றையே மிக உன்னிப்பாக பார்க்க ஆரம்பிப்போம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொன்றையும் அதன் காரண காரியங்களையும் அறிய முற்படுவோம்இதற்குமுன் நாம் ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை என்று நினைப்போம்.

அதன்பின் அதைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள முயலுவோம். குறித்த நேரத்தில் குறித்த இடத்தை அடைவோம்.  நன்கு புரிந்துகொண்டு, எதனையும் சூழ்நிலையின் தேவைக்கேற்ப மிக சுருக்கமாக எளிமையாகவோ அல்லது மிகவும் விரிவான ஒரு குழு விவாதமாகவோ நம்மால் எளிதாக கையாள முடியும். கேள்விகளை விரும்பி எதிர்கொள்வதோடு சுவாரசியமாகவும்  பதிலளிக்கலாம் தன்னம்பிக்கையோடு.

பிறந்தோம், வளர்ந்தோம், திருமணம் முடித்து வாரிசுகளை வளர்த்தோம் என்று நமது கடமையை செய்து முடித்துவிட்டோம் என்று எண்ணாமல் நமது பிறப்பின் நோக்கம் என்ன என்று அறிய முயலும்போது நாம் நம்மை அடையாளம் கண்டுகொள்வோம். அதன்பின் அந்த நோக்கத்தை அடைய நம்மில் உள்ள திறமை என்ன என்று  அறிவதோடு நம்மை தடுத்து நிறுத்தும் தடைகள் என்ன என்பதையும் ஆராய வேண்டும். அவற்றை தவிர்ப்பதற்கு உண்டான வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

நம்முன் இருப்பவர்கள் நமது நோக்கத்தை கேலி செய்யலாம், அதன் விளைவுகளாக ஏற்படுபவற்றை பூதாகரமாக சொல்லி பயமுறுத்தலாம். அவற்றை நாம் நாசுக்காகப் புறக்கணித்து தொடர்ந்து முன்னேற வேண்டும். கையில் பணம் இல்லையே, உதவி செய்ய யாரும் இல்லையே என்று முடங்கிவிடாமல், நமது இலக்கினை அடைய என்ன தேவையோ அதற்க்கு முழுமையான அர்ப்பணிப்புடன் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால் வாழ்வின் உச்சம் தொடலாம்.


You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook