கல்லூரி காலம் முதல் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு - 3

11/28/2010 11:33:00 PM

இதே நாள் ....
வரலாற்றின் பக்கங்களுக்கு வரிகளாக அமையும் .
இதே நாள்தான் ,
நான் என்னை வெளிப்படுத்த விரும்பியது ,
என் நீண்ட பாதையில் நான் எடுத்து வைத்த
பிஞ்சு நடை தொடங்கியது .....
என்றாவது ஒருநாள் இது நடக்கும்
என்று ஏங்கியது துவங்கியது இன்று ...
இனியும் அமைதி என்பது
என்னை மறப்பதும் , மறைப்பதுமல்ல ..
தூங்கி எழுந்தவுடன் மறைந்துபோகும்
கனவுகள் அல்ல எனது இலட்சியங்கள் ..
என் ஒவ்வொரு அனுவிலும்
உயிர் பெற்று கருவாகி
கனிந்தது ..........
ஒவ்வொரு புதிய விடியலும் புதிய
அனுபவம் , ஆம் ......
அன்று இறைவனின் திரும்பப் பெற
இயலாத கணங்கள் எனக்காக
காத்திருக்கும் ..
கருவில் உருவாகும் குழந்தையைப்
போல் ஒவ்வொன்றாக உருப்பெற்று
உயிர் பெற்றது என் ஆன்மா .........!
நாளை விதியின் வீதியில் வீசி
எறியும் குப்பை அல்ல நான்
தேவையில்லாத எண்ணக் குப்பைகளை
தூய்மைப்படுத்த வந்தேன் இன்று ....!
ஆம் ..
என் நீண்ட தவம் கலைந்தது இன்று ..
இனி வாங்க வேண்டியது
வரம் மட்டுமே ...
இதே நாள் ...
என் மெளனம் கலைந்து மனம்
திறந்த இனிய வேளையில் ...
[written on 05.03.2006]

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

2 comments

  1. அன்று இறைவனின் திரும்பப் பெற
    இயலாத கணங்கள் எனக்காக
    காத்திருக்கும் ..

    nalla varigal... thamizhaa... vaazhthukkal..

    ReplyDelete
  2. sir, i was in chennai (chakiat) when i write this poem.exactly one month after i joined in Chakiat...nearly 20 poems to be updated yet.. found little difficulty to type in Tamil earlier. but now I CAN.....! and i'll update balance soon...
    thanks
    thamilselvan.S

    ReplyDelete

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook