குஜராத்தின் அசுர வளர்ச்சி - ஒரு அலசல் !

11/16/2010 07:10:00 PM

கடும் பொளாதார வீழ்ச்சியால் உலகமே அதிர்ச்சியில் உரைந்திருக்கும் நிலையில், அதன் சுவடே தெரியாமல் அசுர வளர்ச்சி கண்டுள்ளது குஜராத் மாநிலம். ஆம், குஜராத்தின் இந்த அதிவேக வளர்ச்சிக்கு என்ன காரணம் ?...இதோ ஓர் அலசல்.......

தொழில் தொடங்க வேண்டுமா?.... கவலை வேண்டாம், உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம் என்கிறார் குஜராத்தின் தொழில்துறை அமைச்சர் சௌரப் பட்டேல்.

இந்தியா முழுவதும், பல நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சியில் தாக்குபிடிக்க முடியாமல் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் குஜராத்தில் பொருளாதார மந்தநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை. வேலை இழப்புகளா ?.... பொருளாதார வீழ்ச்சியை காரணம் காட்டி இதுவரை யாரையும் வீட்டுக்கு அனுப்பியதில்லை என்கிறார் சௌரப் பட்டேல்.

குஜராத்தின் இந்த வளர்ச்சிக்கு, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி முக்கிய காரணம் என்றால் அது மிகயாகாது. ஆம், டாடா-வின் நானோ தொழிற்சாலையை குஜாராத்தில் நிறுவ , அவர் டாடா-விற்கு அறிவித்த சலுகைகள் நாம் அனைவரும் அறிந்ததே.

ஒரு நாளில் ஆறு முதல் எட்டு மணி நேரம் மின்வெட்டு ஆகிறது தமிழகத்தில். ஆனால், குஜராத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்களுக்கு எவ்வளவு மின்சாரம் வேண்டுமானாலும் தருகிறோம் என்கிறது குஜராத் அரசு.

மேலும் தொழிற்துறை வளர்ச்சியில் அரசியல்வாதிகளான நாங்கள் எந்த தலையீடும் செய்வதே இல்லை என்கிறார் சௌரப் பட்டேல்.

குஜராதின் சில சிறப்பு அம்சங்கள்.......இதோ......

அதிக துறைமுகங்கள்கொண்ட மாநிலம் - 42

அதிக விமான தளங்கள்கொண்ட மாநிலம் - 13

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் - 55

டெனீம் தயாரிப்பில் உலகளவில் - 3-வது இடம்

உலகளவில் வைரம் தயாரிப்பில் - 1-வது இடம்

உலகில் உள்ள சிறந்த தொழில் நகரங்களில் விரைவில் குஜராத்திற்கு ஒரு இடம் உண்டு என்றால், அதுதான் உண்மை.
courtesy
sukumar 

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook