ஆறாவது அறிவு மற்றவைகளைவிட மனிதனுக்கான
சிறப்பு அம்சம்....!
என்முன் செல்லும் எறும்புகளை
நசுக்கிப் பார்க்கும் ஆசை ....!
மற்றவர்கள் துன்பப்படும் போது
விலகி நின்று பார்க்கும் ஆசை .....!
அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால்
நான் கவலையாக இருக்கிறேன்
நட்பு என்ற பெயரில் நல்லவை
தவிர மற்றவை பேச ஆசை ...!
காதலியுடன் பேசும் போது
கடந்து செல்லும் பெண்களை
ரசிக்க ஆசை ...!
ஜோடியாக இருப்பவர்களை
தள்ளி நின்று , கிண்டலடித்து
வேடிக்கை பார்க்க ஆசை
ஆம் ......!
எனது இந்த ஆறாம் அறிவின்
அற்புதங்களை நினைத்து
யாரும் கோபப்படவில்லை...! ஏனெனில்
நானும் உயர்ந்த மனிதன் மற்றவர்களை போலவே...!
எங்கோ படித்தவை
***********************
என் இறுதி ஊர்வலத்தில்
நிறைய மலர்கள் தூவுங்கள்
ஒருவேளை அவள் வரக்கூடும்
பாவம் அவள் பாதங்கள் ....!
-------------*****--------------------
ஒவொரு பூவையும் பார்க்கும்போதும்
உனது ஞாபகம் .......
தொட்டுப் பறிக்காமல்
விலகி நின்று , பார்த்து ரசிக்கவே ஆசை ....!
----------------*****--------------------
நானும் ஒரு பேச்சாளன் தான்
உன்னைப் [அழகை] பார்த்து ஊமையாகும் முன்பு வரை ......!
------------------*****----------------
Thanks
Thamilselvan Subramaniam
0 comments