இந்த சூரியனை 21 முறை
சுற்றி முடித்த இந்தநாள்,
என் நினைவுப் பதிவுகளை
அலசிப் பார்கிறேன்...!
சாதனைகளே இல்லாமல் இருந்ததுதான்
என் சாதனை...!
என் பதினாறு வருட படிப்பு
என்னை சிறந்தவனாக்கிவிடவில்லை.
நாள் தோறும் புதுப்புது இலட்சியங்கள் ...!
அடைந்ததுதான் ஒன்றுமில்லை...!
புத்தகங்களை புரட்டும் போது
அன்று கண்ட காட்சிகள்
என்னை புரட்டிப்போடும் ..
வற்றிய மார்புடன் பாலுக்காக அழும்
குழந்தையுடன் பிச்சைஎடுக்கும் ஒரு தாய் ...!
நல்ல விஷயத்தை மட்டம் தட்டிப்பேசுவதில்
மகிழ்ச்சியடையும் என் நண்பர்கள் ....
ஆனாலும் அவர்கள் நல்லவர்கள்
தனிப்பட்ட முறையில் ....!
தோல்வி மனப்பான்மை தேசியமயமாகிவிட்டது .
என்னை சுற்றி நிகழும் மாற்றங்கள்
என்னை செயலற்றவனாக மாற்றுகின்றன
இப்பொழுது புத்தகங்களையும் என்
கண்களையும் மூடியபடி பிராத்திக்கிறேன்
இறைவா ...! இந்தப் புனித தேசத்தின்
வரலாற்றில் சில புதிய பக்கங்களை
எழுதும் வலிமையை எனக்கு கொடு....!
நாம் அற்புதமானவர்கள்
நமது மாற்றம் இந்த தேசத்தின்
தலைவிதியை மாற்றும்
அந்த நாளை எதிர்நோக்கி.
[written on 2003 Oct 18 ]
Thanks
Thamilselvan Subramaniam
0 comments