கல்லூரி காலம் முதல் நான் எழுதிய ,படித்த கவிதைகளின் தொகுப்பு

11/07/2010 11:17:00 AM

                                      ஆதலினால் காதலித்தாள்
                                      ========================
அன்றுதான் முதன் முறையாக ..
ஆற்றல் மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,
ஆம் .. அன்று அவள் கடைக்கண்களிலிருந்து  வெளிப்பட்ட
ஆற்றல்  மிக்க கதிர்களால் தாக்கி நொறுக்கப்பட்டான்,
காதலுக்கு கண் இல்லை என யார் சொன்னது ?
கண் இல்லாமல் காதலே இல்லை .
ஒற்றைப் பார்வையில் அவன் உள்ளத்தில்
பெற்ற உறவையும் விஞ்சி நின்றாள்.
தன் கடைக்கண் பார்வையில்
கதிர்களை வீசி அவனுக்கு
இயற்பியலைப் போதித்தாள்.
தன் பார்வைக் கதிர்களால்
அவன் உயிர் நாடியை வளைத்து,
உயிரியலையும் கற்பித்தாள்.
அதன் விளைவாய் அவனுள்
காதலை தோற்றுவித்து, இரசாயன மாற்றங்களின் மூலம்
வேதியியலை கற்பித்தாள்
காதலின் காரணமாய்
அவளின் கரம் பற்றி வாழ்கைக் கணக்கைத் துவங்க
கணக்கியலையும் கற்பித்தாள்.
அவளின் ஆழ்ந்த பார்வையால்  அவன் மாற்றம் பெற்றான்.
ஆதலினால் காதலித்தாள் அவனை
முன்னை விட அதிகமாய்
இவ்வாறெழுதி  "இவன் - உன் அடிமை "
என ஒப்பமிட்டு என்னவளிடம் நீட்டினேன்.
ஆதலினால் காதலித்தாள்,
என் கவிதையை ......!?
கூடிய விரைவில் என்னையும் .....
                            - அ.வே.தமிழ் அரசன். 
[ ஆதலினால் காதலித்தாள் என்ற தலைப்பில் கலூரியில் நடந்த கவிதை போட்டியில் என் வகுப்புத்தோழன் தமிழ் அரசன் எழுதியது ]

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook