PENGALUKKU SAMARPPANAM..........................

11/12/2010 10:24:00 PM

கணவர்கள் விற்பனைக்கு....



 ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட  விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..


அது என்னன்னா

  1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

  2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே  போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.


இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா....."மச்..கணவர் வாங்குறது  என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது" ..

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு


  இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் "         அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்... " அப்டின்னு போட்டுருந்துச்சு..

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக
முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும்
விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும்
விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல....[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது.....சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் . எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் "

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook