பரளிக்காடு

2/28/2013 02:56:00 PM

கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு.
 பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள்.

அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.
இரண்டு கட்டமாக பரிசல் பயன்படுத்தும் அளவு ஆட்கள் இருந்தால், ஒரு பிரிவை படகு சவாரிக்கும் மற்றொரு பிரிவை மலையேற்றத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். பின் மதிய உணவு முடித்து இடம் மாறிக்கொள்ள வேண்டியது தான்.
குழுவை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப்படும். 
உணவு வகைகள்;
சர்க்கரைப் பொங்கல்
சப்பாத்தி
வெஜ் பிரியாணி
தயிர் பச்சிடியும் குருமாவும்
ராகி களி
கீரைக் குழம்பு மற்றும் கருவாட்டுக் குழம்பு.
தயிர்சாதம்
வாழைப் பழம்
சுருக் தகவல்ஸ்
கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும். 
பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300
15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200
10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.
பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். 
தொடர்பு கொள்ள தொலைபேசி எண் ::  +91 9047051011

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook