"மனித நேயர்' மண்டேலா

12/07/2013 09:22:00 PM

1918 ஜூலை 18ல் தென் ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்கே பகுதியில் பிறந்த மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாஹ்லா. இவரது தந்தை தெம்பு மக்கள் இனத்தலைவராக (அரசராக) இருந்தார். பள்ளியில் மண்டேலாவுக்கு "நெல்சன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தந்தை மரணத்திற்குப்பின் தம் இனத்தின் அரசரானார். "போர்ட்ஹாரே' பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இனவெறியை எதிர்க்க தொடங்கினார். 1944ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் லீக்கை உருவாக்கினர். 1952ல் சட்டப்படிப்பை ¬முடித்து, "முதல் கருப்பர் வழக்கறிஞர்' அலுவலகம் திறந்தார். வழக்கறிஞராக பணியாற்றும்போது நீதித்துறையில் காணப்பட்ட நிறவெறியைக் கண்டு கோபமுற்றார்.

ஆயுள் தண்டனை:


ஆப்பிரிக்க தேசிய காங்கிஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின. இதைக் கண்டு அஞ்சிய வெள்ளை அரசு, 1950ல் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது. 1956ல் மண்டேலா உட்பட 156 பேர், தேசத் துரோக வழக்கில் கைதாகினர். 4 ஆண்டு விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். அப்போதுதான் ""ஷார்ப்பிவில்லி படுகொலை'' நிகழ்ந்தது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த ஆப்பிரிக்கர்கள் மீது, துப்பாக்கியால் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர். அதிர்ச்சியடைந்த மண்டேலா, ""உம்கோண்டோவி சிஸ்வி'' என்ற அமைப்பை நிறுவினார். நாச வேலைகள், கொரில்லாப் போர் போன்ற பயங்கரவாத செயல்களில் அது ஈடுபட்டது. எனினும் அவர் ""ஆயுதம் தாங்கிய போராட்டம் தவிர்க்க இயலாது. ஆனால் தென் ஆப்பிரிக்க பிரச்னையின் இறுதித் தீர்வுக்கு வன்முறை வழி வகுக்காது'' என்ற கருத்தைக் கொண்டிருந்தார். தென் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. தேசத்துரோக வழக்கில் மண்டேலா கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வெற்றியுடன் விடுதலை:


கேப்டவுன் அருகே ரப்பன் தீவு சிறையில் மண்டேலா அடைக்கப்பட்டார். இங்கு வெளி உலகத்தோடு எந்த தொடர்பும் கொள்ள ¬முடியாது. செய்தித்தாள்கள் இல்லை. தாய் இறந்தபோதும், மகன் கார் விபத்தில் இறந்தபோதும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. அரசின் அடக்குமுறைகள், உலகில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஐ.நா., சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொருளாதார தடை தீர்மானம் இயற்றப்பட்டது. பல நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. உள்நாட்டில் இருந்த இடைவிடாத எதிர்ப்பும், வெளிநாடுகளின் பொருளாதார தடையும் கடைசியில் இனவெறி அரசின் கண்களைத் திறந்தன.1985ல் தென் ஆப்பிரிக்க அரசு மண்டேலாவிடம் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. 1988ல் ""வீட்டுக் காவலுக்கு'' மாற்றப்பட்டார். முதலில் அதிபர் போத்தாவோடும் பின் 1989ல் அதிபரான டிகிளார்க்கோடும், மண்டேலா பேச்சுவார்த்தை நடத்தினார். 1990ல் பேச்சுவார்த்தை பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடை அகற்றப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலையாகினர். தொடர்ந்து 27 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பின் 1990 பிப்., 11ல், 72வது வயதில் மண்டேலா விடுதலையானார். 

அதிபராக...


பேச்சுவார்த்தையின் பயனாக, 1993ல் ஒர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஜனநாயக நெறிமுறைப்படி தேர்தல் நடத்த அரசு ஒப்புக்கொண்டது. தேர்தலில் வெற்றி பெற்று 1994ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மண்டேலாவுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி ஈவ்லின், 2வது மனைவி வின்னி, 3வது மனைவி "கிரேகோ மஷேல்'. 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்தியாவும் மண்டேலாவும்:


தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து முதலில் போராட்டம் தொடங்கியவர் மகாத்மா காந்தியடிகள் தான். மண்டேலாவுக்கு இந்திய அரசு மிக உயரிய ""பாரத ரத்னா'' விருதளித்து கவுரவித்தது.

பெருந்தன்மை:


சிறைவாசத்தை விட, வெள்ளை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை மனச்சங்கடத்தை அளித்ததாக மண்டேலா கூறினார். எந்த வெள்ளையர்கள் இனவெறி கொள்கை மூலம் மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தினரோ, அதே வெள்ளையருடன் அதிகாரப் பகிர்வு செய்துகொள்ள ¬முன்வந்தது அவரது பெருந்தன்மையைக் காட்டியது.

courtesy

Dinamalar

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook