30 நதிகளை இணைப்பது சாத்தியமே

11/16/2010 06:34:00 PM

மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நதி நீர் இணைப்பு குறித்த ஒரு ஆரம்பகட்ட ஆய்வறிக்கையை தயார் செய்து அளித்துள்ளது தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு.
இந்தியாவில் 30 முக்கிய நதிகளை இணைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக இந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது.
பாஜக ஆட்சியின்போது நதிகள் இணைப்பு தொடர்பான ஆய்வுகள் தொடங்கின. சென்னையில் காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்ணாவிரதமிருந்தார். அப்போது நதி நீர் இணைப்புதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கு பெரிய தீர்வு என வலியுறுத்தியவர், அந்த முக்கியத்துவத்தை நச்சென்று புரிய வைக்கும் விதத்தில், நதிநீர் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், முதல் ஆளாக தானே ரூ.1 கோடி நிதி தருவேன் என்றும், மேலும் அதற்கான பல முயற்சிகளின் பங்கேற்க முன்வருவதாகவும் கூறினார்.
அதைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்து நதி நீர் இணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இதற்கு பல ஆண்டுகள் முன்பே நதி நீர் இணைப்பு குறித்து மத்தியில் அமைந்த பல்வேறு அரசுகள் பேசி வந்தாலும், இந்த சந்திப்புக்குப் பிறகு, நதி நீர் இணைப்பு குறித்த பேச்சுகள் தீவிரமடைந்தன.
இதற்காக தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு (National Water Development Agency-NWDA) உருவாக்கப்பட்டு நாட்டின் நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய உத்தரவிடப்பட்டது. இதற்கென அப்போது ரூ.5 லட்சம் கோடிகள் செலவாகும் என மத்திய அரசு மதிப்பிட்டது.  இதுகுறித்த முறையான அறிவிப்பினையும் வாஜ்பாய் அரசு வெளியிட்டது.
river-link-map
ஆனால் உடனடியாக இந்த பூர்வாங்க ஆய்வு முடிந்தபாடில்லை.
இந்த ஆய்வை முடிக்க தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு 7 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. அதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பும் எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது.
நாட்டின் 30 முக்கிய நதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பது இதன் ஆய்வில் தெரியவந்துள்ளது நீர் மேம்பாட்டு அமைப்பு.
இந்த ஆய்வறிக்கையின்படி, இமயமலையை சேர்ந்த 14 ஆறுகளையும், தென்னிந்தியாவில் உள்ள 16 ஆறுகளையும் இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கேன்-பேட்வா நதிகளை இணைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.Cauvery
இமயமலையை சேர்ந்த 14 நதிகளில் கோசி-மெச்சி, கோசி-காக்ரா, காக்ரா-யமுனா, கங்கை-கண்டாக், யமுனா-சாரதா, யமுனா-ராஜதான், மானஸ்-சந்தோஸ்-தீஸ்தா-கங்கா ஆகியவை முக்கியமானவை.
காவிரியும் வைகையும்
அதுபோல தென்னிந்தியாவை பொறுத்தவரை மகாநதி-கோதாவரி நதிகளும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைக்க முடியும் என்றும் அதில் கோதாவரி-கிருஷ்ணா ஆகிய இரண்டு ஆறுகளும் மூன்று இடங்களில் இணைக்கப்படலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ சைலத்தில் கிருஷ்ணா நதியுடன் பெண்ணாறு நதியை இணைக்கலாம். சோமசீலம் மற்றும் கிராண்டு அனிகட் ஆகிய இடங்களில் பெண்ணாறு, காவிரி ஆறு ஆகியவற்றை இணைக்கலாம்.
கட்டளை மற்றும் குண்டாறு ஆகியவற்றுடன் காவிரி-வைகை ஆறுகளை இணைக்கலாம்.
பம்பா-அச்சன்கோவில்-வைப்பாறு, நேத்ராவதி-ஹேமாவதி, பேட்தி-வாரதா ஆகியவையும் இணைப்புக்கு சாத்தியமான ஆறுகளே என இந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook