அத்வானி - புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்

11/25/2010 08:32:00 PM

அத்வானி 
Details
Author: R.Muthukumar
ISBN 978-81-8493-140-2
Genre Biography
Book Title Advani
Pages 184
Format Printed Book
Year Published 2009
Price: Rs 80.00சமிபத்தில் படித்த புத்தகம். இந்திய அரசியலில்  தவிர்க்க முடியாத நபர். தேசத்தின் முதல் தேர்தல் ஆரம்பித்து கடைசி லோக்சபா தேர்தல் வரை இவருடைய பங்களிப்பு உண்டு.
1992 டிசம்பர் 6 , பாபர் மசூதி இடிப்பில் ஆரபிகிறது புத்தகம். மசூதியை இடிக்கும் கரசேவர்களை அமைதியாக இருக்க இவர் சொல்ல சொல்ல இடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் [பிரிட்டிஷ் இந்திய ] தொடங்கும் இவரது வழக்கை முழுவதும் தேசத்தின் வரலாறோடு ஒட்டி பயணிக்கிறது.
இரத்ததிற்கு அவரரவர் விருப்பதிற்கு பெயர் வைக்கலாம் என்றால் அத்வானி தயக்கமின்றி R.S.S positive என்று சொல்வார் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதுதான் உண்மை.படிபடியாக நடக்கும் ஜனசங்க தோற்றம் , வாஜ்பாய் உடனான நட்பு , எமர்ஜென்சி சிறை , ஜெயப்ரகாஷ் நாராயணன் மற்றும் மொராஜிதேசாயுடன்  இணைந்து ஜனதா கட்சியில் பணியாற்றியது .பின்னர் அவர் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக ப.ஜ.க வை உருவாக்கிய கதை பிரமிக்கிறது ... இந்தியாவின் அரசியலை தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். ஆனால் நிகழ்வுகள் மிகவும் சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளளது.
 

Thanks
Thamilselvan Subramaniam 

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook