மனித உரிமை மனிதர்களுக்கு மட்டுமே!

11/16/2010 06:54:00 PM

து என்ன புதிரான தலைப்பு என்றெல்லாம் யோசித்து, குழப்பிக் கொள்ள வேண்டாம். எல்லாம் இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட, கோவை கொடூரன் மோகனகிருஷ்ணன் விவகாரம் தான்.
என்கவுன்டரில் என்ன நடந்தது என்று, எல்லாருக்கும் தெரியும்; ஆனால், தெரியாதது போல பேசுவோம், கேட்போம், நடந்து கொள்வோம். கொஞ்சம் கூட சந்தேகத்திற்கே இடமில்லாத கொடூர குற்றவாளியை, மனசாட்சி சொன்னபடி போட்டுத் தள்ளியிருக்கின்றனர். இதற்கு, மனித உரிமை அமைப்புகள் இவ்வளவு தூரம் ஏன் எகிறுகின்றன என்று தெரியவில்லை. இந்த மனித உரிமை மீறல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், இன்னும் எத்தனை நாளைக்கு, உங்கள் குழந்தைகளை நீங்களே கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டு, பிறகு பத்திரமாக வீட்டிற்கு கூட்டி வரப்போகிறீர்கள். ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள், பள்ளி வேன் டிரைவர்களை நம்பித்தானே ஆக வேண்டும். அவர்களுக்கு தொழிலில் ஒரு பக்தி இருக்க வேண்டும். கூடவே என்கவுன்டர் பயம் இருக்க வேண்டும். காரணம், முன்பு போல இப்போது நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வது கிடையாது. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என, பெற்ற பிள்ளையை யார் தான் சீரழிக்க விடுவர்.


குழந்தைக்காக எதையும் விட்டுத் தரலாம்; ஆனால், எதற்காகவும் குழந்தையை விட்டுத் தரமுடியாது. ஏனெனில், இங்கே குற்றம் செய்வது என்பது மிகச்சாதாரணமாகி விட்டது. இன்ஜினியரிங் படித்துவிட்டு லண்டனிலும், சிங்கப்பூரிலும் வேலை பார்ப்பதை விட, குழந்தையை கடத்தினால் கோடி, கோடியாக சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. முன்பெல்லாம், வருடத்திற்கு ஒரு முறை கூட லஞ்சம் வாங்கி பிடிபடுவோர் படம் வராது. ஆனால், இப்போது அன்றாட இன்றைய நிகழ்ச்சி போல, தினம் ஒருவர் படம் வருகிறது. கடந்த 10ம் தேதி தினமலர் நாளிதழில், மூன்று பேர் படம் இடம் பெற்றிருந்தது. அவர்களில் இருவர், செய்த குற்றத்தால் கூனி குறுகி, துணியால் முகத்தை எல்லாம் மூடிக்கொள்ளவில்லை. பதக்கம் வாங்கியவர் ரேஞ்சிற்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளனர். பிக்பாக்கெட், திருட்டு போன்றவை இப்போதெல்லாம் போலீஸ் பார்வையில் பெரிய கிரைமே கிடையாது. குத்து, வெட்டும் கூட அந்த ரகம் தான். மேலும், இங்கே ஒரு குற்றவாளியை குற்றவாளிதான் என்று நிரூபிப்பதும் ரொம்பவே கடினம். பணமே பிரதானம் என்றாகிவிட்ட இந்த உலகத்திலே, கொஞ்சம் பணம் செலவழித்தால் எப்.ஐ.ஆரில் பெயர் வராமல் செய்து விடலாம். அதுமுடியாவிட்டால், இன்னும் கொஞ்சம் பணம் செலவு செய்தால் வழக்கில் சிக்காமல் இருக்க முடியும். அதுவும் முடியாதபோது, இன்னும் கொஞ்சம் பணம் செலவழித்தால், கோர்ட் படியேறாமல் பார்த்துக் கொள்ளமுடியும். அதுவும் முடியாதபோது, இன்னும் கொஞ்சம் பணம் செலவழித்தால் சிறையில் ராஜபோகமாக வாழ முடியும். அதுவும் கொஞ்சகாலம்தான். அப்புறம் ஜாமீனில் வந்து வழக்கம் போல செயல்படலாம். காரணம், சிறைச்சாலை என்ன அறச்சாலையா... உள்ளே போனவர்கள் அனைவரையும் திருத்தி திருப்பி அனுப்ப, அங்கேயும் கொஞ்சம் பணம் செலவழித்தால் , கைபேசி உள்ளிட்ட சகல வசதிகளுடன் வலம் வரலாம்.
 "இப்படி போய் விவரம் இல்லாம மாட்டிக்கிட்டேயே...' என்று சொல்லி, இன்னும் குற்றம் செய்ய கூர்மைப்படுத்தும் வேலைதான் நடக்கும். இதனால்தானே 100 முறை சிறை சென்ற சிறைப்பறவை மீண்டும் கைது என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ஒருமுறை உள்ளே வலுவாக கவனிக்கப்பட்டால், இன்னொரு முறை சிறைக்குள் போகும் எண்ணம் வருமா... வராது. ஆனால், அதெல்லாம் நடக்குமா... நடக்காது. காரணம், மனித உரிமை மீறலாகி விடுமாம். இன்னும் ஒரு படி மேலே போய், குற்றவாளியே மனசு மாறி, "ஐயா நான்தான் அந்த குற்றத்தை செய்தேன்' என்று சொன்னாலும், சந்தர்ப்பங்களும், சாட்சிகளும், விசாரணைகளும் குற்றத்தை ருசுப்படுத்த தவறினால், அவரே ஒத்துக்கொண்டாலும் அவர் குற்றவாளியாகிவிட முடியாது.

இந்த லட்சணத்தில், மோகனகிருஷ்ணனை என்ன செய்யச் சொல்கிறீர்கள். கண்ணே... மணியே "கசாப்பே' என்று மும்பை பயங்கரவாதியை விசாரிப்பது போல, மக்களின் வரிப்பணத்தை கோடி, கோடியாக செலவழிப்போமா... கொஞ்ச நாள் போனால் யாராவது ஒரு வி.ஐ.பி.,யை கடத்தி வைத்து, "கசாப்பை விடுதலை செய்' என்று சொல்வர். நாமும் ஹெலிகாப்டரில் கொண்டு பத்திரமாக விட்டுவிட்டு வருவோம். பட்டபாடு, ஏற்பட்ட சிரமங்கள், செய்த செலவு அவ்வளவும் வீணாகிவிடுமே. அப்புறம் கசாப்பால் இரக்கமின்றி கொல்லப்பட்டவர்களின் ஆன்மா, நம்மை மன்னிக்குமா? ஆகவே, சட்டதிட்டப்படி என்கவுன்டர் நடக்கும்போது, "அப்படியா...' என்று இருந்து கொள்ள வேண்டியதுதான். மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுத படை சட்டத்தை எதிர்த்து, சியாமளா என்ற சமூக ஆர்வலர், 10 வருடங்களாக நீர், ஆகாரமின்றி உண்ணாவிரதம் இருக்கிறாரே, அங்கே மனித உரிமை அமைப்பினர் குரல் கொடுக்கலாம் தவறில்லை.

அமெரிக்காவில் கார் வாங்குவதற்காக, பெற்ற பிள்ளையை டாலர்களில் விற்ற செலவாளி அன்னையை எதிர்த்து குரல் கொடுக்கலாம், நியாயமாக இருக்கும். சீனாவில் புகார் கொடுக்கும் ஏழை, எளிய மக்களை, நடுத்தெருவில் நிறுத்தி வைத்து காட்டுமிராண்டித்தனமான முறையில் அவமானப்படுத்தி வருகின்றனரே, அதை கண்டித்து குரல் கொடுக்கலாம். அதை விடுத்து, மோகனகிருஷ்ணனுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது எந்த விதத்தில் நியாயம். "ரத்தத்தை பாலாக்கி கொடுத்தேனே... இப்படி பண்ணிட்டியேடா ...' என்று எந்த தவறு இருந்தாலும் மன்னித்து ஏற்கும் பெற்ற தாயும், கட்டிய மனைவியும் கூட, மோகனகிருஷ்ணன் பிணத்தை மதித்து வாங்க வரவில்லையே. அதில் இருந்தே தெரியவில்லை, இவன் எவ்வளவு கிராதகன் என்று. இன்னும் கொஞ்ச நாள் ஆகியிருந்தால், மக்கள் இன்னொரு, "ஜல்' புயலினாலோ அல்லது பிரமாண்டமான சினிமாவினாலோ அல்லது புதிய சீரியல் பார்ப்பதிலோ அக்கறை கொண்டு, நடந்த சம்பவத்தை மறந்திருப்பர். குற்றவாளியும் ஜாமீனில் வெளிவந்து, உங்கள் கூடவே உட்கார்ந்து சினிமா பார்த்துக் கொண்டு இருப்பார். தண்டனை என்பது இவ்வளவுதானா என்று தெரிந்து, அடுத்த குற்றத்திற்கு தயாராகிவிடுவார்.

கோவை மக்கள் சொன்னது போல, மனித உரிமை மீறல் என்பது மனிதர்களுக்குதானே தவிர, மோகனகிருஷ்ணன் போன்ற மிருகங்களுக்கு இல்லை. என்கவுன்டர் நடக்கவேண்டும் என்று, யாரும் வேண்டிக் கொள்ளவில்லை; ஆனால், நடந்ததற்காக யாரும் வருத்தப்படவும் இல்லை. என்கவுன்டரால் என்னவெல்லாம் நடந்திருக்கிறது தெரியுமா? சென்னையில் பணத்திற்காக சிறுவர்களை கடத்தியவர்கள், தங்களுக்கு ஜாமீன் கிடைத்தும், "ஐயா...வேண்டாம் கொஞ்சநாள் நாங்கள் உள்ளேயே இருக்கோம்...' என்று சொல்லி விட்டனர். மோகனகிருஷ்ணனின் கூட்டாளி மனோகரன், துப்பாக்கியை பார்த்தாலே பயந்தவனாக, காக்கி சட்டை போட்டவர்களைக் கண்டாலே கையெடுத்து கும்பிடுபவனாக ஒரு மனநோயாளி போலாகிவிட்டான். இவர்கள் இப்படிஎன்றால், இன்னொரு பக்கம் விழிப்புணர்வும் கொடிகட்டி பறக்கிறது. காவல்துறை மீது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சொல் எனும் கல்லெறிந்து விமர்சனம் செய்தவர்கள் கூட, கொஞ்சம் மரியாதையுடன் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
பள்ளிகளில் காணாமல் போய் கிடந்த, பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் உயிர்த்து கொண்டு, உஷாரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சிவகங்கை போன்ற சிறிய நகரங்களில் உள்ள பள்ளிக்குழந்தைகள் கூட, தங்களது ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை விரல் நுனிகளில் வைத்துள்ளனர். ஆக, கூட்டிக் கழித்து பார்க்கும் போது, ஆரம்பத்தில் சொன்னது போல, மோகனகிருஷ்ணன் என்கவுன்டரால், நாட்டிற்கு நல்லதே நடந்திருக்கிறது. இவ்வளவிற்கு பிறகும் மோகனகிருஷ்ணன் விஷயத்தில், மனித உரிமைகள் மீறப்பட்டதாக கருதுவார்களேயானால்... மனித உரிமைகள் இதுபோன்ற விஷயங்களில் மீறப்பட வேண்டியவையே என்பதே பதிலாக அமையும்.

நன்றி: தினமலர் - உரத்த சிந்தனை

Thanks
Thamilselvan Subramaniam

You Might Also Like

3 comments

  1. thamizha, sila naatkkalukku mum indha seidhiyai dinamalaril paditthen. podhuvaagavey dinamalar meedhirundha mariyaadhai kuraindhu vittadhu. seidhiyai paditthapaodhu kovamdhaan vandhadhu... yaen makkal ippadi unarchi pizhambugalaaga maari vittanar endru... oru vishayatthai alasa vendaamaa... mohanakrishnan kuttravaali ena theerppu solla vendiyadhu yaar. suttu kondra polisaa? alladhu indha maru kolayai paaraattum aalum arasaangatthin kattuppaattil irukkum patthirigai ulagamaa? alladhu vedi veditthu kondaadi niyaayappadutthiya makkalaa? sindhippom, oru kolaikku mattroru kolai theerppey aagadhu. appadiye vaitthu kondaalum oru kuttravaali kolla pattullaan, mattravan kadhai enna aanadhu...unmayil indha thavarai seiyya naandhaan thittam theettinen endru andha innoru kuttravaali sonnadhaagavum oru thagaval ulladhu. indha vazhakku mudindhu vittadhaa? andha innoru kuttravaali enna aanaan? avan vazhakku endha courtil nadakkiradhu? adhai yen indha patthirigai ulagam veliyidavilla. indha kolayil (encounteril) pala surukkugal ullaadhaagavey enakku therigiradhu. udhaaranatthirkku indha kuttravaaliyai iruttil azhaitthu sendradhu yen? vilangidaamal kootti sendradhu yaen? patthirigai nirubargal illaamaal sendradhu yaen? ulavutthurai kaavalaaligal ponadhu yaen? kaaval thurayaaleye sariyaaga iyakka pada mudiyaadha thuppaakkiyai avan sulabamaaga kaiyaandadhu eppadi? idhey pondra thuridha nadavadikkai ellaa vazhakkugalilum edukkappadumaa? illai. yen endru kaettal koyambutthur sambavam nadandha sila naatkkalileye thamizhagatthin mattroru maavattatthilum idhe kodumai oru pen kuzhandhaikku nadandhadhu. arasaangamum ondrum seiyyavillai. koovi kooppaadu paodum patthirigaigalum ondrum seiyyavillai. enendraal andha pen kuzhandhai koyambatthor thozhilabadhirukku pirakkavilla. andha pen kuzhandhai yezhai kudumbatthil pirandhadhu. adhu andha kuzhandhayin thavara. avalukkaaga kural kodukka indha naattu sattamum varavillai, manidha urimai aarvalargalum varavillai. aaga motthathil idhu oru kolaye. munnam sonnadhu pola kolaikku kolai mudivaagaadhu. thani oruvan seidhaal kolai, satta mandra yedhirppalaigalai thavirkka arasaanga thoondudhalin peril kaaval thurai seidhaal adhan peyar encounter... naam sindhitthu seyal pada vendum. unarchi vendum aanal unarchi pizhambaagivida koodaadhu enbadhu en karutthu. idhu niyaayappadutthappadumaanaal indhiyaavil 100 il 40 vazhakkuku encounterdhaan theerppaagum kaalam vegu viraivil varum. kaakki chattai anidha neradi needhipadhigalum, avargalai pinnaal irundhu iyakkum vellai chattai arasiyal vaadhi aagiya needhipadhigalum adhigam thenpaduvaargal. yen karutthu thavaraagum patchatthil vivaadham varaverkkappadugiradhu.

    ReplyDelete
  2. sir, one think i agree with you. encounter is also a kind of murder.its a combined failure of judicial and government system. Now India Divided between power and powerless. same as rich between poverty.those who are in power and rich they are creating this kind of dramas.same happened in Coimbatore and Chennai child kidnaps.our judicial system needs atleast 10 to 12 years to give a judgment (up to final judgment by supreme court). even after our government takes minimum 10 to 15 years to hang this criminals. so that people has last their confidence over our judicial system.if any one punished (in encounter) they are supporting.but heart says it should be avoid but mind say no way as at this systems.....

    ReplyDelete
  3. What you say is correct thamizha. I feel pity, shame about our judicial systems. Honestly speaking, whenever I see any advocate with the stinking long black dress (even they do not know why they still wear a brit style dress in hot countries like India), i feel pity for them. It is ridiculous. I feel there is very few but painful solutions to this. There is a deliberate need of a civil war in India demanding revolutionary development process. Otherwise some one should become a dictator and change the country from upside down. Then there is a chance of India becoming a super power. Otherwise we can dream only. Honestly speaking, it is my dream to be the dictator of India.

    ReplyDelete

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook