, ,

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!

10/17/2013 07:59:00 PM

பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. பெரிய அளவில் உருண்டையான இலை வகையை சேர்ந்த முட்டைக்கோஸ் கிழக்கு மெடிடேரேனியன் மற்றும் ஆசியாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். சுலபமாக அனைவராலும் வாங்கக்கூடிய மலிவு விலை காயாகவும் விளங்குகிறது முட்டைக்கோஸ். முட்டைக்கோஸிலேயே சிவப்பு மற்றும் பச்சை என பல வகைகள் உள்ளது. அவைகளை பச்சையாகவும் உண்ணலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். சில காயை போல் அல்லாமல், இதனை பச்சையாக சாப்பிட்டாலும் சுவை மிகுந்ததாகவே இருக்கும். அவற்றின் சுவை லேசான இனிப்புடன் நுகர்வதற்கும், சுவைக்கும் நன்றாக இருக்கும். வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ள முட்டைக்கோஸில் கலோரிகளும் குறைவாக உள்ளது. இதனை கிழக்கு மற்றும் மேற்கு வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இப்போது அந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்ப்பதால், எந்த மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!! புற்றுநோயை தடுக்க உதவும் முட்டைக்கோஸில் உள்ள பல குணங்கள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை எதிர்த்து போராடும். அதிலும் இதில் உள்ள சல்போரோபேன் மற்றும் இண்டோல் 3 கார்பினோல் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டவைகளாகும். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முட்டைக்கோஸில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து இயக்க உறுப்புகளை அடக்கும். அழற்சியை எதிர்க்கும் குணங்கள் இந்த காய்கறியில் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளதால், அழற்சியினால் ஏற்படும் மூட்டு வலியை எதிர்த்து போராடும். கண்புரை இடர்பாட்டை நீக்கும் முட்டைக்கோஸில் உள்ள பீட்டா-கரோட்டின் கண்களில் ஏற்படும் மாக்குலர்த்திசு சிதைவில் இருந்து காக்கும். அதனால் கண்புரை வராமல் காக்கும். அல்சைமர் ஏற்படும் ஆபத்து குறையும் முட்டைக்கோஸை உட்கொண்டால், முக்கியமாக சிவப்பு நிற முட்டைக்கோஸ், அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது. அதற்கு காரணம் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே என்னும் சத்து தான். குடற்புண் சிகிச்சைக்கு உதவி புரியும் குடற்புண் அல்லது வயிற்றில் ஏற்படும் அல்சரை குணப்படுத்த முட்டைக்கோஸை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் சாற்றில் உள்ள அதிக அளவிலான க்ளுடமைன், அல்சரை குணப்படுத்தும் குணங்களைக் கொண்டது. உடல் எடை குறைய துணை நிற்கும் எப்போதும் உடல் எடை மீது கவனம் கொண்டவர்கள் கண்டிப்பாக முட்டைக்கோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முழு கப் சமைத்த முட்டைக்கோஸில் வெறும் 33 கலோரிகள் தான் உள்ளது. அதனால் முட்டைக்கோஸ் சூப்பை எத்தனை கப் வேண்டுமானாலும் குடியுங்கள், அது எடையை அதிகரிக்காது. மலச்சிக்கலுக்கு நிவாரணி இதிலுள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்திற்கு உறுதுணையாக விளங்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. பொலிவான சருமம் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளதால் அது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தக்க வைக்கும். தசை வலியில் இருந்து நிவாரணம் முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசை வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். எனவே தசை வலி இருக்கும் போது முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.

Courtesy

தமிழும் சித்தர்களும்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook