ஏன் ஆங்கில அரசு, ஆகஸ்ட் 15யை இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது?...

10/22/2013 09:55:00 AM

எத்தனையோ நாட்கள் இருக்கும் போது குறிப்பாக ஆகஸ்ட் 15 , ஏன் ஆங்கில அரசு, இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது? உண்மையில்..., உண்மையான தேசிய உணர்வுடன் சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே?

ஆகஸ்ட் 15 என்ற இந்த தினம், இந்தியாவின் சுதந்திர தினமாக எத்தேச்சையாகவோ, அல்லது நம் விடுதலை போராளிகளின் நிற்பந்தத்தாலோ ஆங்கிலேயர்கள் தேர்வு செய்துவிடவில்லை. இந்தியாவின் சுதந்திர தினம்., இந்த நாளாகத்தான் இருக்க வேண்டும் என்று முன்பே தீர்மானம் செய்யப்பட்டு, நரித்தந்திரத்தோடுதான் இந்தியாவின் சுதந்திர தினமாக ஆங்கிலேயர்களால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்ன முக்கியத்துவம் இருக்கிறது அந்த நாளுக்கு என்கிறீர்களா? வாருங்களேன் அதைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

இன்றைய நவீன உலகின் மாபெரும் யுத்த ஆயுதமாக திகழும் ‘அணு ஆயுதத்தால்’ இரண்டாம் உலகப்போரின்போது தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்ட ஜப்பான், போரில் தான் ‘சரணடைவதாக’ அறிவித்த தினம் ஆகஸ்ட் 15, 1945. இந்த தினத்தை வரலாற்றில் எப்போதும் நிலைநிருத்திவிட வேண்டும் என்று விரும்பிய ஆங்கிலேயர்கள் மிக புத்திசாலித்தனமாக இந்தியாவிற்கான சுந்தந்திர தினமாக அதனை தேர்வு செய்தனர். அதுமட்டுமின்றி ஜப்பானியர்களை பலி வாங்கவேண்டும் என்ற எண்ணத்துடனும், இந்திய-ஜப்பானியர்களிடையே சுமூகமான நல் உறவு எக்காலத்திலும் இருக்ககூடாது என்ற எண்ணத்தினாலும்தான் மிகப்பர்ப்பஸாக இந்த தினம் தேர்வு செய்யப்பட்டது. அது ஏன் என்கிறீர்களா? அதற்க்கு காரணம் சுபாஸ் சந்திர போஸும், அவரது இந்திய தேசிய ராணுவ படையும்தான்.

காந்திஜியின் அகிம்சா வழியில் சுதந்திரத்தை பெற்றுவிட முடியாது என்று நம்பிய சுபாஸ், இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்த ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் நினைத்தால் அல்லது ஆதரித்தால் இந்தியாவின் அடிமை சங்கிலியை உடைத்துவிடலாம் என்று நம்பினார். ‘இந்திய விடுதலைக்கு உதவி’ என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜெர்மனும், இத்தாலியும், பின்வாங்கிக்கொள்ள, ஜப்பான் அரசு இந்திய விடுதலையை ஆதரித்தது அதோடு தேவையான உதவியும் அளிப்பதாக உறுதியளித்தது. தொடர்ந்து இந்திய விடுதலைக்காக, 1942-ஆம் ஆண்டு., ‘பிகாரி போஸ்’ என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு பின்பு போதிய ஆதரவின்றி கலைக்கப்பட்ட ‘இந்திய தேசிய ராணுவம்’ சுபாஸ் சந்திர போஸால் புத்துயிர் ஊட்டப்பட்டு, 43,000-க்கும் அதிகமான வீரர்கள் கொண்ட பெரும்படையாக ‘இந்திய தேசிய ராணுவம்’ உருவாக எல்லாவிதத்திலும் ஆதரவாக ஜப்பான் உதவிபுரிந்தது. இதன் காரணமாக எரிச்சலுற்ற ஆங்கிலேயர்கள், போரின் முடிவில் அணு ஆயுதத்தால் வீழ்த்தப்பட்டு ஜப்பான் சரணடைந்ததும், ஜப்பானியர்கள் தங்களது நாட்டின் துயர நாள் என்ற ரீதியில் துக்கத்துடன் அனுசரிக்கும் அதே ஆகஸ்ட் 15, இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ‘சாடிஸ்ட்’ எண்ணத்துடன் ஆகஸ்ட் 15-ஐ இந்தியாவின் சுதந்திர நாளாக அறிவித்தது.

காரணத்தை நான் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான், இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.!

இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்.., ஜெய்ஹிந்த்!

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook