குறள் 741:
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
மு.வ உரை:
(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.Translation:
fort is wealth to those who act against their foes;Explanation:
Is wealth to them who, fearing, guard themselves from woes.
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.
குறள் 742:
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
மு.வ உரை:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.Translation:
A fort is that which owns fount of waters crystal clear,Explanation:
An open space, a hill, and shade of beauteous forest near.
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
மு.வ உரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.Translation:
Height, breadth, strength, difficult access:Explanation:
Science declares a fort must these possess.
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
மு.வ உரை:
காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.Translation:
A fort must need but slight defence, yet ample be,Explanation:
Defying all the foeman's energy.
A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.
குறள் 745:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
மு.வ உரை:
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.Translation:
Impregnable, containing ample stores of food,Explanation:
A fort for those within, must be a warlike station good.
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
குறள் 746:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
மு.வ உரை:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.Translation:
A fort, with all munitions amply stored,Explanation:
In time of need should good reserves afford.
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).
குறள் 747:
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
மு.வ உரை:
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.Translation:
A fort should be impregnable to foes who gird it round,Explanation:
Or aim there darts from far, or mine beneath the ground.
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.
குறள் 748:
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
மு.வ உரை:
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும், (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.Translation:
Howe'er the circling foe may strive access to win,Explanation:
A fort should give the victory to those who guard within.
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
குறள் 749:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
மு.வ உரை:
போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.Translation:
At outset of the strife a fort should foes dismay;Explanation:
And greatness gain by deeds in every glorious day.
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
குறள் 750:
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
மு.வ உரை:
எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை.Translation:
Howe'er majestic castled walls may rise,Explanation:
To craven souls no fortress strength supplies.
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.
0 comments