ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
மு.வ உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.Translation:
Search out, to no one favour show; with heart that justice lovesExplanation:
Consult, then act; this is the rule that right approves.
To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
மு.வ உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.Translation:
All earth looks up to heav'n whence raindrops fall;Explanation:
All subjects look to king that ruleth all.
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
மு.வ உரை:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.Translation:
Learning and virtue of the sages spring,Explanation:
From all-controlling sceptre of the king.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
மு.வ உரை:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.Translation:
Whose heart embraces subjects all, lord over mighty landExplanation:
Who rules, the world his feet embracing stands.
The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
மு.வ உரை:
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.Translation:
Where king, who righteous laws regards, the sceptre wields,Explanation:
There fall the showers, there rich abundance crowns the fields.
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
மு.வ உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.Translation:
Not lance gives kings the victory,Explanation:
But sceptre swayed with equity.
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
மு.வ உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சிTranslation:
செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
The king all the whole realm of earth protects;Explanation:
And justice guards the king who right respects.
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
மு.வ உரை:
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.Translation:
Hard of access, nought searching out, with partial handExplanation:
The king who rules, shall sink and perish from the land.
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
மு.வ உரை:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.Translation:
Abroad to guard, at home to punish, bringsExplanation:
No just reproach; 'tis work assigned to kings.
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
மு.வ உரை:
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.Translation:
By punishment of death the cruel to restrain,Explanation:
Is as when farmer frees from weeds the tender grain.
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.
0 comments