குறள் 831:
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
மு.வ உரை:
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.Translation:
Familiarity What one thing merits folly's special name.Explanation:
Letting gain go, loss for one's own to claim!.
Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.
குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
மு.வ உரை:
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.Translation:
'Mid follies chiefest folly is to fix your loveExplanation:
On deeds which to your station unbefitting prove.
The greatest folly is that which leads one to take delight in doing what is forbidden.
குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
மு.வ உரை:
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.Translation:
Ashamed of nothing, searching nothing out, of loveless heart,Explanation:
Nought cherishing, 'tis thus the fool will play his part.
Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the fool.
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
மு.வ உரை:
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.Translation:
The sacred law he reads and learns, to other men expounds,-Explanation:
Himself obeys not; where can greater fool be found? .
There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teaching.
குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
மு.வ உரை:
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.Translation:
The fool will merit hell in one brief life on earth,Explanation:
In which he entering sinks through sevenfold round of birth.
A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.
குறள் 836:
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
மு.வ உரை:
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.Translation:
When fool some task attempts with uninstructed pains,Explanation:
It fails; nor that alone, himself he binds with chains.
If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail. (But) is it all ? He will even adorn himself with fetters.
குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
மு.வ உரை:
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.Translation:
When fools are blessed with fortune's bounteous store,Explanation:
Their foes feed full, their friends are prey to hunger sore.
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.
குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
மு.வ உரை:
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.Translation:
When folly's hand grasps wealth's increase, 'twill beExplanation:
As when a mad man raves in drunken glee.
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
மு.வ உரை:
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.Translation:
Friendship of fools is very pleasant thing,Explanation:
Parting with them will leave behind no sting.
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
மு.வ உரை:
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.Translation:
Like him who seeks his couch with unwashed feet,Explanation:
Is fool whose foot intrudes where wise men meet.
The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bed.
0 comments