திருக்குறள்,
பொருட்பால்
திருக்குறள் - பொருட்பால் - குடியியல் - நன்றியில்செல்வம்
1/04/2015 09:59:00 AM
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
மு.வ உரை:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.Translation:
Who fills his house with ample store, enjoying none,Explanation:
Is dead. Nought with the useless heap is done.
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him).
குறள் 1002:
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
மு.வ உரை:
பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.Translation:
Who giving nought, opines from wealth all blessing springs,Explanation:
Degraded birth that doting miser's folly brings.
He who knows that wealth yields every pleasure and yet is so blind as to lead miserly life will be born a demon.
குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
மு.வ உரை:
சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.Translation:
Who lust to heap up wealth, but glory hold not dear,Explanation:
It burthens earth when on the stage of being they appear.
A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame.
குறள் 1004:
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
மு.வ உரை:
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.Translation:
Whom no one loves, when he shall pass away,Explanation:
What doth he look to leave behind, I pray?.
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.
குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
மு.வ உரை:
பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.Translation:
Amid accumulated millions they are poor,Explanation:
Who nothing give and nought enjoy of all they store.
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches.
குறள் 1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
மு.வ உரை:
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.Translation:
Their ample wealth is misery to men of churlish heart,Explanation:
Who nought themselves enjoy, and nought to worthy men impart.
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
குறள் 1007:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
மு.வ உரை:
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.Translation:
Like woman fair in lonelihood who aged grows,Explanation:
Is wealth of him on needy men who nought bestows.
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband.
குறள் 1008:
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
மு.வ உரை:
பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.Translation:
When he whom no man loves exults in great prosperity,Explanation:
'Tis as when fruits in midmost of the town some poisonous tree.
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
மு.வ உரை:
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.Translation:
Who love abandon, self-afflict, and virtue's way forsakeExplanation:
To heap up glittering wealth, their hoards shall others take.
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.
குறள் 1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
மு.வ உரை:
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.Translation:
'Tis as when rain cloud in the heaven grows day,Explanation:
When generous wealthy man endures brief poverty.
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while).
0 comments