குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
மு.வ உரை:
மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.Translation:
The base resemble men in outward form, I ween;Explanation:
But counterpart exact to them I've never seen.
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).
குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
மு.வ உரை:
நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.Translation:
Than those of grateful heart the base must luckier be,Explanation:
Their minds from every anxious thought are free!.
The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).
குறள் 1073:
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
மு.வ உரை:
கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.Translation:
The base are as the Gods; they tooExplanation:
Do ever what they list to do!.
The base resemble the Gods; for the base act as they like.
குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
மு.வ உரை:
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.Translation:
When base men those behold of conduct vile,Explanation:
They straight surpass them, and exulting smile.
The base feels proud when he sees persons whose acts meaner than his own.
குறள் 1075:
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
மு.வ உரை:
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.Translation:
Fear is the base man's virtue; if that fail,Explanation:
Intense desire some little may avail.
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
மு.வ உரை:
கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.Translation:
The base are like the beaten drum; for, when they hearExplanation:
The sound the secret out in every neighbour's ear.
The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.
குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
மு.வ உரை:
கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.Translation:
From off their moistened hands no clinging grain they shake,Explanation:
Unless to those with clenched fist their jaws who break.
The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.
குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
மு.வ உரை:
அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.Translation:
The good to those will profit yield fair words who use;Explanation:
The base, like sugar-cane, will profit those who bruise.
The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.
குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
மு.வ உரை:
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.Translation:
If neighbours clothed and fed he see, the baseExplanation:
Is mighty man some hidden fault to trace?.
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
மு.வ உரை:
கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.Translation:
For what is base man fit, if griefs assail?Explanation:
Himself to offer, there and then, for sale!.
The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted ?.
0 comments