காமத்துப்பால்,
திருக்குறள்
திருக்குறள் - காமத்துப்பால் - கற்பியல் - படர்மெலிந்திரங்கல்
1/04/2015 12:31:00 PM
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.Translation:
I would my pain conceal, but see! it surging swells,Explanation:
As streams to those that draw from ever-springing wells.
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.
குறள் 1162:
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.Translation:
I cannot hide this pain of mine, yet shame restrainsExplanation:
When I would tell it out to him who caused my pains.
I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.
குறள் 1163:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
மு.வ உரை:
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.Translation:
My soul, like porter's pole, within my wearied frame,Explanation:
Sustains a two-fold burthen poised, of love and shame.
(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them.
குறள் 1164:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
மு.வ உரை:
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.Translation:
A sea of love, 'tis true, I see stretched out before,Explanation:
But not the trusty bark that wafts to yonder shore.
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
குறள் 1165:
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
மு.வ உரை:
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?.Translation:
Who work us woe in friendship's trustful hour,Explanation:
What will they prove when angry tempests lower?.
He who can produce sorrow from friendship, what can he not bring forth out of enmity ?.
குறள் 1166:
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
மு.வ உரை:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.Translation:
A happy love 's sea of joy; but mightier sorrows rollExplanation:
From unpropitious love athwart the troubled soul.
The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater.
குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
மு.வ உரை:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.Translation:
I swim the cruel tide of love, and can no shore descry,Explanation:
In watches of the night, too, 'mid the waters, only I!.
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.
குறள் 1168:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
மு.வ உரை:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.Translation:
All living souls in slumber soft she steeps;Explanation:
But me alone kind night for her companing keeps!.
The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion.
குறள் 1169:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா.
மு.வ உரை:
( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.Translation:
More cruel than the cruelty of him, the cruel one,Explanation:
In these sad times are lengthening hours of night I watch alone.
The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me.
குறள் 1170:
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
மு.வ உரை:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.Translation:
When eye of mine would as my soul go forth to him,Explanation:
It knows not how through floods of its own tears to swim.
Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears.
0 comments